மாதவிலக்கு நிற்கும் நேரத்தில் கவனிக்க வேண்டியவை

மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு சராசரியான பெண்கள் துடிப்பான ஆரோக்கியத்துடனே இருக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் சில
உபாதைகள் ஏற்பட போவதும் உறுதி. அதில் சில சற்று பெரிய தொந்தரவுகளாக இருக்கும். 

மாதவிடாய் நிற்கப்போகும் காலத்திலேயே இந்த உபாதைகள் வர தொடங்கிவிடும். எந்த மாதிரியான உடல் உபாதைகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம். 

• மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறி ஏற்படும் போது முதலில் ஏற்பட போவது ஹார்மோன் மாற்றங்களால் இதற்கு முன் இல்லாத அளவில் தலை வலி இருக்கும். 

மாதவிடாய் ஏற்படும் போது அல்லது வாய்வழி கருத்தடை எடுத்துக் கொள்ளும் போது பொதுவாக உங்களுக்கு தலைவலிகள் இருந்தால், இந்த தாக்கம் உங்களுக்கு அதிகமாக இருக்கும். 

இதில் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், மாதவிடாய் நிறுத்தத்தை எட்டியவுடன் ஹார்மோன் அளவுகள் சீராக இருக்கும். இதனால் தலைவலிகள் ஏற்படுவது குறைந்துவிடும். 

• ஞாபகப்படுத்தி பார்க்கும் திறனிலும், தெளிவாக யோசிப்பதிலும், உங்களுக்கு பிரச்சனை ஏற்படலாம். இது தூக்கமின்மையால் அல்லது தூக்கம் களைவதால் கூட இருக்கலாம். 

• உங்களுக்கு மன அழுத்தம், கோபம் அல்லது அழுகை ஏற்படலாம். இதற்கு முன் இல்லாத அளவிற்கு உங்கள் மனநிலையில் பெரியளவில் ஏற்ற இறக்கம் இருக்கும். 

கருப்பையில் ஹார்மோன் அளவுகள் குறைவதால், மனநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது என கருதப்படுகிறது. போதிய தூக்கம் இல்லாமல் போவதாலும், இரவில் வியர்த்து கொட்டுவதாலும் கூட உங்கள் மனநிலை பாதிக்கப்படும். 

• வறட்சி மற்றும் இதர பிரச்சனைகளான அரிப்பு, வெள்ளைக் கழிவு, வலி அல்லது எரிச்சல் போன்றவைகளை நீங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும். இவையெல்லாம் ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவதால் ஏற்படும். 

• உடலுறவின் மீதான நாட்டம் சுத்தமாக இல்லாமல் போகலாம். அல்லது அதற்கு மாறாக உடலுறவின் மீதான உங்கள் நாட்டம் எப்போதும் இல்லாத அளவிற்கு மீட்டெழுச்சி பெறலாம். 

• உங்களுக்கு சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத பிரச்சனை ஏற்படலாம். அதாவது உங்களை அறியாமலேயே சிறுநீர் கசிவு ஏற்படலாம். ஈஸ்ட்ரோஜென் குறைவதால் சிறுநீர் வடிகுழாயின் உட்பூச்சு சன்னமாக மாறும். இதனால் தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.     
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget