அதிரடி குத்துப் பாட்டில் சார்மி

தமிழில் சிம்பு நடித்த காதல் அழிவதில்லை என்ற படத்தில் அறிமுகமானவர் சார்மி. அதன்பிறகு ஆஹா என்ன அழகு, லாடம் போன்ற படங்களில்
நடித்திருந்த சார்மி, தெலுங்கு சினிமாவில் தனக்கான கதாநாயகி வாய்ப்புகள் குறைந்த பிறகு அதிரடியாக குத்துப்பாட்டு நடிகையாகவும் உருவெடுத்தார் அவரது அதிரடி கவர்ச்சி நடனத்திற்காக ஆந்திராவில் ஒரு பெரும் ரசிகர்கள் கூட்டம் தியேட்டர்களை நோக்கி படையெடுத்தன.

ஆனபோதும், சமீபகாலமாக சில புதுவரவு குத்தாட்ட நடிகைகளின் புதுக்கவர்ச்சிக்கு முன்பு சார்மியின் பழைய கவர்ச்சி ஜெயிக்க முடியவில்லை. அதனால் அவரது மார்க்கெட் டல்லடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், தமிழில் விஜய்மில்டன் இயக்கும் ''பத்து எண்றதுக்குள்ள'' படத்தில் விக்ரமுடன் ஒரு பாடலில் நடனமாடியிருக்கிறார்.

அது அதிரடி குத்துப்பாடல் என்று செய்தி வெளியாகியிருக்கிறது. ஆனால் இதுபற்றி விஜய்மில்டன் கூறுகையில், அந்த பாடல் குத்துப்பாட்டு அல்ல. ஒரு வித்தியாசமான நாடகம் கலந்த பாடல் என்கிறார். அந்த பாடலிலும் ஒரு செய்தி சொல்கிறேன். முக்கியமாக சார்மியை ரொம்ப டீசன்டான டிரஸ் அணிந்து நடனமாட வைத்திருக்கிறோம். விக்ரம் படத்திற்கென்று ஒரு குவாலிட்டி இருக்கிறதல்லவா அதை மீறிவிலலை என்கிறார் விஜய் மில்டன்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget