நம்ம ஊர் நடிகை ப்ரியாஆனந்த்

முன்பெல்லாம் படப்பிடிப்பு தளங்களில் மூடியாகத்தான் இருப்பார் ப்ரியாஆனந்த். காரணம் அவர் லண்டன் நடிகை என்பதால் மற்றவர்கள்
அவரை விட்டு விலகியே நின்றனர். ஆனால், அதையடுத்து, மற்றவர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியாக, நான் பிறந்து வளர்ந்தது லண்டன் என்றாலும், நானும் தமிழ்காரிதான். என் பாட்டிகூட சென்னையில்தான் இருக்கிறார். அவருடன்தான் நான் தங்கியிருக்கிறேன் என்று மீடியாக்களில் செய்தி வெளியிட்டதை அடுத்து , அட ப்ரியாவும் நம்ம ஊர் நடிகைதான் என்று அவரிடம் சக நடிகர் நடிகைகள் சகஜமாக பேசிப்பழகத் தொடங்கினர்.

விளைவு, அதையடுத்து வாய் திறந்து சகஜமாக பேசத் தொடங்கிய ப்ரியாஆனந்த் இப்போது பேச்சு பேச்சென்று பேசிக்கொண்டிருக்கிறார். அவர் இருக்கும் படப்பிடிப்பு தளத்தில் அரட்டைக்கு பஞ்சமே இல்லை. அந்த வகையில், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் நடித்தபோது ஸ்பாட்டில் விமல், சூரியுடன் எந்த நேரமும் வாயாடிக்கொண்டேயிருந்தாராம் ப்ரியாஆனந்த்.

இதற்கு முன்பு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தபோது, சிவகார்த்திகேயன்-சூரியுடன் ஸ்ரீதிவ்யா வாயாடியதாக சொன்னவர்கள். இப்போது ப்ரியாஆனந்தின் பேச்சைக்கேட்டு விட்டு, இவர் அளவுக்கு தற்போது அரட்டையடிக்க எந்த கோலிவுட் நடிகைகளாலும் முடியாது, பேச்சுன்னா பேச்சு அப்படியொரு பேச்சு. காதே கிழிந்திடும் போங்க என்கிறார்கள். அப்படத்தில் ஒர்க் பண்ணிய சக கலைஞர்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget