தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1 கப்,
புளித்த தயிர் - 1/2 கப்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
மோர் மிளகாய் - 3,
உப்பு - தேவைக்கு,
கறிவேப்பிலை, கொத்த மல்லித்தழை - தேவைக்கு,
இஞ்சி - 1 டீ ஸ்பூன் (பொடியாக நறுக்கியது),
உடைத்த வேர்க் கடலை - 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். தயிரை கடைந்து அத்துடன் ஓட்ஸ் மாவு, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீரை விட்டு கரைத்துக் கொள்ளவும். கரைசல், தோசை மாவை விட சற்று நீர்க்க இருக்க வேண்டும். அடிகனமான கடாயை (நான்-ஸ்டிக் கடாய் சிறந்தது) அடுப்பில் ஏற்றி, அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் மோர் மிளகாயை ஒன்றிரண்டாக கிள்ளிப் போடவும். அத்துடன் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், இஞ்சி சேர்த்து சிவக்க வறுக்கவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஓட்ஸ் மாவை ஊற்றி கை விடாமல் கிளறவும். மாவு சட்டியில் ஒட்டாமல் பந்து போல் சுருண்டு வரும்போது (5 அல்லது 6 நிமிடங்கள் ஆகும்) எண்ணெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி சமப் படுத்தி வேர்க்கடலை தூவி சற்று ஆறியதும் துண்டுகள் போடவும். வறுத்த மோர் மிளகாய் அல்லது தேங்காய்த் துருவலுடன் பரிமாறலாம். மோர் மிளகாய் இல்லை என்றால் காய்ந்த மிளகாயை உபயோகிக்கலாம்.

கருத்துரையிடுக