தேவையான பொருட்கள்
மைதா - 200 கிராம்,
வெண்ணெய் - 100 கிராம்,
பொடித்த சர்க்கரை - 160 கிராம்,
பால் பவுடர் - 100 கிராம்,
வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்,
ஆப்ப சோடா - 1/2 டீஸ்பூன்,
தயிர் - 1/2 கப்,
பால் - 1/2 கப்,
தண்ணீர் - 1/2 கப்.
செய்முறை
மைதாவுடன் ஆப்ப சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும். பாலுடன் தண்ணீர் கலந்து வைக்கவும். வெண்ணெயையும் சர்க்கரையையும் சேர்த்து அடித்து வைக்கவும். அதனுடன் பாதி அளவு பால் பவுடர், பாதி அளவு தயிர் சேர்த்து சிறிது நேரம் அடித்து பிறகு மீதி பாதி பால் பவுடர், பாதி தயிரையும் சேர்த்து கலக்கவும். எசென்ஸ் சேர்க்கவும். பால் கலவையையும் பாதி மைதாவையும் சேர்க்கவும். அதே போல் மீதியையும் கலக்கவும். வெண்ணெய் தடவி மைதா தூவிய கிண்ணத்தில் ஊற்றி 180 டிகிரி சென்டிகிரேடில் 1/2 மணி நேரம் பேக் செய்யவும். பிறகு 160 டிகிரி சென்டி கிரேடில் மீண்டும் ஒரு 10 நிமிடம் பேக் செய்யவும்

கருத்துரையிடுக