தேவையான பொருட்கள்
மைதா - 1 கப்,
பொடித்த சர்க்கரை - 1 1/2 டேபிள்ஸ்பூன்,
கொக்கோ பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்,
ஆப்ப சோடா - 1/2 டீஸ்பூன்,
உருக்கிய வெண்ணெய்-4-5 டேபிள்ஸ்பூன்,
கன்டன்ஸ்டு பால் - 1/2 டின்,
வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்,
தண்ணீர் - 1/2 கப்,
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்.
அலங்காரம் செய்ய
செர்ரீஸ் - 1 டின்,
க்ரீம், சாக்லெட் - தேவைக்கு.
செய்முறை
மைதாவில் ஆப்ப சோடா, பேக்கிங் பவுடர், கொக்கோ பவுடர் சேர்த்து சலிக்கவும். வெண்ணெயில் கன்டன்ஸ்டு பால், எசென்ஸ், சர்க்கரை சேர்த்துக் கலந்து அதில் மைதா, தண்ணீர் மாற்றி மாற்றி சேர்த்து ஊற்றும் பதம் வரும் வரை கலந்து கொள்ளவும். இக்கலவையை வெண்ணெய் தடவி, மைதா தூவி சேர்த்த கேக் கிண்ணத்தில் ஊற்றி 180 டிகிரி சென்டிகிரேடில் 25-30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். வெந்த கேக்கை குறுக்காக இரண்டு துண்டங்களாக்கவும். அதன் மேல் சிறிது தண்ணீரில் கரைத்த சர்க்கரையை தெளிக்கவும். அதன் மேல் க்ரீம் தடவி செர்ரீஸால் அலங்கரிக்கவும். பிறகு இரண்டு துண்டங்களையும் ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து மேலே க்ரீம் தடவி, செரீஸால் அலங்கரித்து, அதன் மேல் சாக்லெட் துருவி அலங்கரித்து, குளிர வைத்துப் பரிமாறவும்.

கருத்துரையிடுக