கத்தி வசூல் முழு நிலவரம்

தமிழ்த்திரையுலகில் 100 கோடி ரூபாய் வசூல் என்பது இன்னும் ஒரு பெரும்கனவாகவே இருந்துவரும் நிலையில் ஒருசில படங்கள்
அந்தவசூலைத் தொட்டுக்கொண்டிருக்கின்றன. “சிவாஜி, எந்திரன், துப்பாக்கி” படங்களுக்குப்பிறகு விஜய் நடித்துள்ள மற்றுமொருபடம் ரஜினியின் படங்களை அடுத்து அந்த சாதனையைப்புரிந்துள்ளது. இரண்டுவாரங்களுக்கு முன்பே கத்தி படம் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துவிட்டதாக அப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்தார். கடந்த இரண்டு வாரங்களில் படத்தின் வசூல் மேலும் ஒரு பத்து கோடியைப் பெற்றிருக்கும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக, தற்போது வரும் திரைப்படங்கள் நான்கு வாரங்களைத்தாண்டி ஓடுவது என்பது எட்டாக்கனியாகவே இருந்துவருகிறது. ஆனால், கத்தி படம் நான்காவதுவாரத்தைக் கடக்க உள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் இன்னமும் 30 திரையரங்குகளுக்கும் மேல் இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்ப்படங்களைப் பொறுத்தவரையில் இதுவரையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மட்டுமே 100 கோடிகிளப்பில் இணைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து ரஜினிகாந்த் நடித்து வெளிவரும் லிங்கா, கமல்ஹாசன் நடித்து வெளிவரும் உத்தமவில்லன், அஜித் நடித்து வெளிவரும் என்னை அறிந்தால் ஆகியபடங்கள் அந்தக்கிளப்பில் இணையுமா என்பதே அவரவர் ரசிகர்களின் மிகப்பெரும் ஆவலாக உள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget