தேவையான பொருட்கள்
மைதா மாவு - 170 கிராம்,
வெண்ணெய் - 115 கிராம்,
பொடித்த சர்க்கரை - 115 கிராம்,
முட்டை - 2,
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்,
ஜாம் - 30 கிராம்,
பால் - தேவையான அளவு.
கேரமல் செய்ய தேவையான பொருட்கள்
தண்ணீர் - 50 மி.லி.,
சர்க்கரை - 50 கிராம்.
கேரமல் செய்முறை
சர்க்கரையை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அடுப்பின் மேல் வைத்து சூடாக்கவும். சர்க்கரை கரைந்து பழுப்பு நிறமாகும். பிறகு தண்ணீரை விட்டு ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடவும். அடுப்பிலிருந்து இறக்கவும். அது கொழகொழவென்று வெல்லப் பாகு போல் இருக்கும்.
கேக் செய்முறை
சர்க்கரை, வெண்ணெயைச் சேர்த்துக் குழைக்கவும். இதனுடன் முட்டை சேர்த்து அடிக்கவும். பிறகு இத்துடன் கேரமல்லையும், மைதா, பேக்கிங் பவுடர் கலவை சேர்த்து, சிறிது பால் கலந்து பேக்கிங் டின்னில் ஊற்றி, 180 டிகிரி சென்டி கிரேடில் 30-35 நிமிடங்கள் பேக் செய்யவும். கேக், பேக் ஆனதும் ஜாமை அதன் மேல் தடவி வெட்டவும்.

கருத்துரையிடுக