தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி - 1 கப்,
கெட்டி மோர் - 2 கப்,
துருவிய கேரட் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க...
கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு தலா - 1/2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - 1 கொத்து.
அலங்கரிக்க...
கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்.
செய்முறை
புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து நீர்விட்டு கெட்டியாக அரைத்தெடுக்கவும். அதில் உப்புச் சேர்த்து மோரில் கரைத்து மீண்டும் ஒரு டம்ளர் நீர் விட்டுக் கரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்திருப்பவற்றை தாளித்து கரைத்து வைத்த மோர்க் கலவையை அதில் ஊற்றி அடிப்பிடிக்காமல் கிண்டவும். மாவு வெந்து பழுத்து வந்ததும், ஒரு தட்டில் எண்ணெய் தடவி, வெந்த மோர்க் கலவையைக் கொட்டி, ஆறிய பிறகு கேக் துண்டுகளாகப் போடவும். மேலே கேரட் துருவலையும் கொத்தமல்லித்தழையையும் தூவவும்.

கருத்துரையிடுக