தேவையான பொருட்கள்
மைதா - ஒன்றே முக்கால் கப்,
வெண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன் (உருக்கியது),
பொடித்த சர்க்கரை - 1 கப்,
தயிர் - 3/4 கப்,
கொக்கோ பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்,
ஆப்ப சோடா - 1 டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்,
வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்,
பால் - 1/2 - 3/4 கப்.
செய்முறை
மைதா, கொக்கோ பவுடர், ஆப்ப சோடா, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்த்து இரண்டு முறை சலித்துக்கொள்ளவும். பிறகு வெண்ணெயில் சர்க்கரை, எசென்ஸ், தயிர் சேர்த்துக் கலந்து, அதனுடன் மெதுவாக மைதாக் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். பாலையும் மைதாவையும் மாற்றி மாற்றி சிறிது சிறிதாக ஊற்றும் பதம் வரும் வரை சேர்த்துக் கலந்து, வெண்ணெய் தடவி மைதா தூவிய கிண்ணத்தில் ஊற்றி 180 டிகிரி சென்டிகிரேடில் 35-40 நிமிடங்கள் பேக் செய்யவும். கேக் ஆறியதும் ஃபட்ஜ் ஐஸிங்கை மேலே தடவவும்.
பட்ஜ் ஐஸிங் செய்முறை
தேவையான பொருட்கள்
வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
பொடித்த சர்க்கரை - 1 கப்,
கொக்கோ - 1 டேபிள்ஸ்பூன், பால் - 1/2 கப்.
செய்முறை
அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகச் சேர்த்து கொதிக்க விடவும். உருட்டுப் பதம் வந்ததும் இறக்கி விடவும். தண்ணீரில் சிறிது கொதித்த கலவையிலிருந்து ஒரு துளி எடுத்துப் போட்டு உருட்டினால் உருண்டு வரும். இதுவே உருட்டுப் பதம். இந்த ஐஸிங்கை கேக் சிறிது ஆறியதும் தடவலாம்.

கருத்துரையிடுக