சூர்யா சம்பளம் எவ்வளவு தெரியுமா

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதுதான் ஸ்டுடியோ க்ரீன் பேனரில் அவர் நடிக்கும்
கடைசிப்படம். 25 கோடி சம்பளம் பெற்றுக் கொண்டு மாஸ் படத்தில் நடிக்கும் சூர்யா, இப்படத்தில் கிடைக்கும் லாபத்தை வைத்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் கடன்களை அடைத்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டார். 
மாஸ் படம் வெளியான அதன்பிறகு கே.இ.ஞானவேல்ராஜா இந்த நிறுவனத்தைவிட்டு வெளியேறுகிறார். 

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தில் தற்போது இணை தயாரிப்பாளராக இருக்கும் எஸ்.ஆர்.பிரபுவை நிர்வாகியாக வைத்துக் கொண்டு ஸ்டுடியோ க்ரீன் பேனரை ஸோலோவாக அண்டர்டேக் பண்ண இருக்கிறார் நடிகர் கார்த்தி. 
சூர்யாவோ தனக்காக 2டி என்ற நிறுவனத்தைத் தொடங்கிவிட்டார். 
மாஸ் படத்தில் நடிப்பதோடு இந்நிறுவனம் தயாரிக்கும் படத்தின் வேலைகளையும் கவனித்து வருகிறார் சூர்யா. 

ஹவ் ஓல்ட் ஆர்யூ மலையாள படத்தின் தமிழ் ரீ-மேக்கை 2டி தயாரிக்கிறது. இப்படத்தின் முக்கிய கேரக்டரில் ஜோதிகா நடிப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். 

மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடித்த கேரக்டரை தமிழில் ரஹ்மான் ஏற்று நடிக்கிறார். 

இந்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் ரஹ்மானே குறிப்பிட்டுள்ளார். 
மலையாள ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூஸே தமிழிலும் இயக்குகிறார். 

இப்படத்திற்கு இசை அமைக்கும் பொறுப்பை சந்தோஷ் நாராயணனிடம் வழங்கியுள்ளார் சூர்யா. 

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget