'ஆடுகளம்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் டாப்சி. அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றாலும் டாப்சியால்
தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் ஜொலிக்க முடியவில்லை. அந்தப் படத்திற்குப் பிறகு “வந்தான் வென்றான், ஆரம்பம்'' ஆகிய படங்களில் மட்டுமே நடித்திருந்தார். தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் 'முனி 3 கங்கா' படத்திலும், 'வை ராஜா வை' படத்திலும் நடித்து வருகிறார். அதோடு ஹிந்தியில் “பேபி, ரன்னிங் ஷாதி.காம்” ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில், தொடர்ந்து படிக்க விரும்புவதாக டாப்சி தெரிவித்துள்ளார். “கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் போதே ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர் ஆக வேண்டும் என நான் நினைக்கவில்லை. மூன்றாமாண்டில் எனக்கு வேலை வாய்ப்பு கிடைத்தாலும், மேற்கொண்டு எம்பிஏ படிக்கத்தான் ஆசைப்பட்டேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், என் கல்லூரி நாள் முழுவதிலும், ஒரு மிகப் பெரிய படத்திற்காக மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்க்க வேண்டும் என்பதே எனது ஆசையாக இருந்தது.
ஆனால், நான் நடிகையானதும் என்னுடைய கனவு எல்லாம் பின்னால் போய்விட்டது. இருந்தாலும் எனது கனவை நான் கைவிட்டுவிடவில்லை. மீண்டும் படிக்க ஆசைப்படுகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து படிக்க வேண்டுமென்றால் சினிமாவை விட்டு விலகினால்தானே முடியும்...அப்படி ஒரு முடிவை டாப்சி எடுப்பாரா என்பது சந்தேகம்தான்.

கருத்துரையிடுக