2014 ஆண்டு பல நட்சத்திரங்களுக்கு மங்களகரமான ஆண்டாக இருந்தது. இல்லற வாழ்வில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் இவர்கள்...
நஸ்ரியா-பகத் பாசில்
நேரம் படத்தின் மூலம் அறிமுகமாகி ராஜாராணி மூலம் புகழ்பெற்ற மலையாள நடிகை நஸ்ரியா, நையாண்டி, திருமணம் என்னும் நிக்காஹ் என பரபரவென வளர்ந்து கொண்டிருக்கும்போதே மலையாள நடிகர் பகத் பாசிலை ஆகஸ்ட் 21ந் தேதி திருமணம் செய்து கொண்டார். இது பெற்றவர்கள் நடத்தி வைத்த திருமணம். காதல் திருமணமல்ல.
சமீரா ரெட்டி-அக்ஷய் வர்தே
தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை படங்களில் நடித்தவரும் பிரபல இந்தி நடிகையுமான சமீரா ரெட்டி தான் பல ஆண்டுகளாக காதலித்து வந்த அக்ஷய் வர்தேவை தனது 32வது வயதில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தை நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் பங்கேற்க ஜனவரி 21ந் தேதி மும்பை நட்சத்திர ஓட்டலில் நடத்தினார்.
மீரா ஜாஸ்மின்-அனில் ஜான் டைட்டல்
தமிழ்பட இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் பிருத்விராஜ் என பலருடன் கிசுகிசுக்கப்பட்ட மீரா ஜாஸ்மின் இறுதியில் துபாயை சேர்ந்த இன்ஜினீயர் அனில் ஜான் டைட்டசை பிப்ரவரி 16ந் தேதி திருமணம் செய்து கொண்டார். அனில் ஜான் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து செய்தவர். அவர் தன் முதல் திருமணம் பற்றி விண்ணப்பத்தில் தெரிவிக்கவில்லை என்று கூறி திருவனந்தபுரம் மாநகராட்சி அனில், மீரா திருமணத்தை பதிவு செய்ய மறுத்துவிட்டது.
சின்மயி-ராகுல்
ஏ.ஆர்.ரகுமானால் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னணி பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி நடிகர் ராகுல் ரவீந்தரை பிப்ரவரி 12ந் தேதி திருமணம் செய்து கொண்டார். மாஸ்கோவின் காவிரி படத்தில் அறிமுகமாகி சில படங்களில் நடித்தார் ராகுல். தெலுங்கில் செகண்ட் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
விஜய்-அமலாபால்
சிறுபட்ஜெட் படங்களில் நடித்துக் கொண்டிருந்த அமலாபாலை தனது தெய்வமகள் படத்தின் மூலம் கமர்ஷியல் ஹீரோவாக்கினார் இயக்குனர் ஏ.எல்.விஜய். அன்று முதல் இருவருக்கும் காதல் மலர... அது கிசுகிசுவாக தொடர.... கடைசியில் ஜுன் 12ந் தேதி இருவரும் திருணம் செய்து கொண்டார்கள்.
செந்தில்-ஸ்ரீஜா
சரவணன், மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்த செந்திலும், மீனாட்சியாக நடித்த ஸ்ரீஜாவும் நிஜத்திலும் காதலித்து வந்திருக்கிறார்கள். செந்தில் சினிமா ஹீரோவான பிறகும் காதல் தொடர... ஜூன் 20ந் தேதி திருப்பதியில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுவிட்டு பின்னர் அதனை அறிவித்தார்கள்.
கிருஷ்ணா-கைவல்யா
கழுகு, அலிபாபா, யாமிருக்க பயமே, வானவராயன் வல்லவராயன், வன்மம் படங்களில் நடித்த கிருஷ்ணா, தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் மகன், இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் தம்பி. காதல் எதிலும் விழாமல் இருந்தவருக்கு உறவுக்கார பெண் கைவல்யாவை பிப்ரவரி 6ந் தேதி திருமணம் செய்து வைத்தார்கள். திருமணம் கோவையிலும், வரவேற்பு சென்னையிலும் நடந்தது.
அட்லி-கிருஷ்ணப்ரியா
ஷங்கரின் உதவியாளரான அட்லீ ராஜாராணி என்ற ஒரே படத்தின் மூலம் உயரத்துக்கு சென்றார். 8 வருடமாக தான் காதலித்த தனது தோழியும், சின்னத்திரை நடிகையுமான கிருஷ்ணப்ரியாவை நவம்பர் 9ந் தேதி திருமணம் செய்து கொண்டார்.
பத்மப்ரியா-ஜாஸ்மின் ஷா
நடிகை பத்மப்பிரியாவுக்கு தமிழில் வாய்ப்பு இல்லையென்றாலும் மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இடையில் அமெரிக்காவுக்கு படிக்கப்போன இடத்தில் உடன் படித்த -ஜாஸ்மின் ஷாவுடன் காதலில் விழுந்தார். நவம்பர் 12ந் தேதி மும்பையில் கல்யாணமும் செய்து கொண்டார்.
செண்ட்ராயன்&கயல்விழி
வில்லனாக அறிமுகமாகி காமெடி நடிகராக வளர்ந்து வரும் செண்ட்ராயன் தான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பிருந்தே காதலித்து வந்த கயல்விழியை ஆகஸ்ட் 31ந் தேதி கரம்பிடித்தார்.
காம்னா-சுராஜ் நாக்பால்
இதய திருடன், காசேதான் கடவுளாக உள்பட சில தமிழ் படங்களில் நடித்த காம்னா ஜெத்மலானி பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியின் பேத்தி. இவர் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சுராஜ் நாக்பாலை ரகசிய திருமணம் செய்து கொண்டார். பல மாதங்களுக்கு பிறகே திருமணம் செய்ததை ஒத்துக் கொண்டார்.

கருத்துரையிடுக