ஹுவே அசெண்ட் பி 7 ஸ்மார்ட்போன்

ஹுவே நிறுவனம் Ascend P7 என்ற பெயரில், தன்னுடைய புதிய ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் திரை 5 அங்குல
அளவில் உள்ளது. திரை முழுமையுமாக ஹை டெபனிஷன் ஐ.பி.எஸ். டச் ஸ்கிரீன் தொழில் நுட்பம் இயங்குகிறது. 

இதன் டச் சென்சிடிவ் காட்சியை, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாக்கிறது. ஹுவே நிறுவனத்தின் 1.8 கிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் ப்ராசசர், இந்த போனை இயக்குகிறது. இதில் ஆண்ட்ராய்ட் கிட்கேட் 4.4 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. இதில் தரப்பட்டுள்ள இன்டர்பேஸ் ஹுவே நிறுவனத்தின் சொந்த தயாரிப்பாகும். 

இதன் கேமரா 13 மெகா பிக்ஸெல் திறனுடன், சோனி நிறுவனத்தின் பி.எஸ்.ஐ. சென்சார் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறமாக 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா இயங்குகிறது. இதில் இந்தியாவில் விரைவில் இயக்கத்திற்கு வர இருக்கும் FD-LTE band 3 தொழில் நுட்பம் இயங்குகிறது. 

இதனை அறிமுகப்படுத்திய விழாவில், இந்நிறுவன இயக்குநர் பேசுகையில், இந்த மொபைல் போன், நவீன தொழில் நுட்பத்தினை விரும்புபவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஏற்றதாக இருக்கும் என்று கூறினார். இதன் வடிவமைப்பில் தரப்பட்டுள்ள நுணுக்கமும், தோற்றமும் அவர்களை அதிகம் கவரும் என்றார். 

இதில் DDR3 RAM 2 ஜி.பி. தரப்பட்டுள்ளது. இதன் ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதன் தடிமன் 6.5 மிமீ. எடை 124 கிராம். இதில் நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி/3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பம் இயங்குகின்றன. கருப்பு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மொபைல் போனின் அதிக பட்ச விலை ரூ.24,799.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget