கிளாசிகல் குயின் ஆகும் பூர்ணா

திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு 'குத்தாட்டம்' ஆடுவதற்குத்தான் சிலரை அழைப்பார்கள். இது பல காலமாக நடந்த வரும் ஒரு விஷயம். ஆனால்
ஒரு படத்திற்கு ஒரு 'கிளாசிகல் டான்ஸ்' ஆடுவதற்கு ஒரு நடிகையை அழைத்த விஷயம் சமீப காலத்தில், ஏன் இதுதான் முதல் முறையாகக் கூட இருக்கும். தமிழில் 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்தில் நாயகியாக அறிமுகமான பூர்ணா, தொடர்ந்து சில தமிழ்ப் படங்களிலும், தெலுங்குப் படங்களிலும் கூட நடித்தார். விஜய்யால் அடுத்த அசின் என்று பாராட்டப்பட்டவர் சரியான படங்களைத் தேர்ந்தெடுக்காத காரணத்தால் அப்படிப்பட்ட ஒரு இடத்தைப் பிடிக்காமலே இருக்கிறார். தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புக் கிடைக்காதவருக்கு தற்போது தெலுங்கில் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கொரட்டாலா சிவா இயக்கத்தில் மகேஷ் பாபு, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் புதிய படத்தில் ஒரு பாடல் ஒன்றிற்கு நடனமாடும் வாய்ப்பு பூர்ணாவிற்குக் கிடைத்துள்ளது. படத்தில் அற்புதமான ஒரு கிளாசிக்கல் நடனம் ஒன்றை வைக்க இயக்குனர் முடிவு செய்துள்ளார். அதில் நன்றாக நடனம் ஆடத் தெரிந்த நடிகையை நடனமாட வைக்க ஆசைப்பட்டு, பலரைத் தேடியுள்ளார்கள். கடைசியாக அந்த வாய்ப்பு பூர்ணாவிற்குக் கிடைத்திருக்கிறது. அவரும் மகேஷ் பாபு படம் என்பதால் உடனே சம்மதித்துவிட்டாரா. 'கதக்' நடனத்தில் தேர்ச்சி பெற்றவரான பூர்ணா இந்தப் பாடலுக்குப் பொருத்தமாக இருப்பார் என இயக்குனர் சிவாவும் திருப்தியடைந்துவிட்டாராம்.

இந்தப் பாடலைப் படமாக்குவதற்காக பிரம்மாண்டமான செட் ஒன்றை உருவாக்கி வருகிறார்களாம். அதில் அடுத்த மாதம் பூர்ணா நடனமாடும் பாடல் காட்சியைப் படமாக்க உள்ளார்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget