சுந்தர். சி. இயக்கத்தில் விஷால் தயாரித்து இயக்கியுள்ள ஆம்பள படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா இன்று சத்யம்
திரையரங்கில் நடைபெற்றது. விஷால் பட விழாவில் தவறாமல் ஆஜராகும் ஆர்யா, ஆம்பள இசைவெளியீட்டு விழாவுக்கும் வரத்தவறவில்லை. அது மட்டுமல்ல, வழக்கம்போல் அனைவரையும் தனக்கே உரிய பாணியில் செமத்தியாய் கலாய்த்தார் ஆர்யா. ஆம்பள படம் எப்ப மச்சான் ரிலீஸ்னு விஷால்கிட்டக் கேட்டேன். பொங்கலுக்குன்னு சொன்னான். பாத்து மச்சான்..பெரிய படங்கள் எல்லாம் வருதுன்னு சொன்னதுக்கு, எவனா இருந்தாலும் வெட்டுவேன்னு சொல்றான் என்று ஜாலியாய் பேசிய ஆர்யா, ஹன்சிகாவையும் விட்டு வைக்கவில்லை.
என்ன படத்தில நடிச்சுக்கிட்டிருக்கேன்னு ஒரு நாள் ஹன்சிகாகிட்டக் கேட்டேன். அம்பாலா படத்தில் நடிச்சுக்கிட்டிருக்கிறதா சொன்னாங்க. அம்பாலாவா? நமக்குத் தெரிஞ்சு அப்படி ஒரு படம் தயாராகவே இல்லையேங்கிற டவுட்டுல யாரு ஹீரோன்னு கேட்டேன். விஷால்னு சொன்னாங்க. அப்புறம்தான் புரிஞ்சுது.. ஆம்பளையைத்தான் இப்படி அம்பாலான்னு சொல்லி இருக்காங்கன்னு..
ஆம்பள படத்தில் வைபவ்வும் நடித்திருக்கிறாராம். அந்த அடிப்படையில் பேச வந்தார் வைபவ். ஹன்சிகா என்னை அண்ணான்னுதான் கூப்பிடுவேன்னு அடம் பிடிச்சு அண்ணா..அண்ணான்னு கூப்பிட்டாங்க. அதுக்காக நான் வருத்தப்படலை. அண்ணான்னு என்ன அர்த்தம்னு உங்களுக்கு தெரியுமே? என்று ஹன்சிகாவுக்கு தமிழ்தெரியாது என்ற தைரியத்தில் ஆபாசமாகப் பேசினார்.
மைக் கிடைத்தால் பட்டிமன்ற பேச்சாளர்களைப்போல் பழைய காமெடியை நேற்று நடந்ததுபோல் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் காமெடியன் சதீஷ். ஆம்பள விழாவிலும் அப்படியே... திருட்டுவிசிடி ரெய்டுக்கு விஷால் போனப்ப நானும் கூடப் போனேன். விசிடி கடைக்குப்போய் ஏன்யா திருட்டு விசிடி விக்கிறீங்கன்னு விஷால் கோபமாக கேட்டாலும் அதை எல்லாம் அவர்கள் சட்டைப்பண்ணாமல்.. ஐ விஷால் என்று வேடிக்கைப் பார்க்கிறார்கள். அதனால் விஷால் ஆஃபாகிவிடுவார். என்று கதை சொன்னார். சிரிப்பு நடிகர் மன்சூரலிகான் மைக் பிடித்ததும் யாரைப்பற்றியும் கவலைப்படாமல், என்னை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுத்தால் ஒரே நாளில் திருட்டு விசிடியை ஒழித்துவிடுவேன் என்று சூளுரைத்துவிட்டுப்போனார். வைபவ், ஜி.கே.ரெட்டி, எஸ்.ஏ.சந்திரசேகரன், மதுரை அன்பு, ஆர்யா, ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஹன்சிகா, சுசீந்திரன், குஷ்பூ, சதீஷ், பிளாக் பாண்டி, டைரக்டர் திரு, ஷ்ரேயா ரெட்டி, சுபாஷ் சந்திரபோஸ், ஞானவேல்ராஜா, கதிரேசன் உட்பட திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்

கருத்துரையிடுக