வில்லியாக பட்டைய கிளப்பும் சூசன்

தென்றல் தொடரில் அறிமுகமானவர் சூசன். அதன் பிறகு தியாகம் தொடரில் நடித்தார். தற்போது ஆபீஸ், சரவணன் மீனாட்சி தொடர்களில் நடித்து
வருகிறார். என்றாலும் மைனா சூசன் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். அந்த அளவிற்கு மைனாவில் அவர் நடித்த வில்லி கேரக்டர் பிரபலமானது. அதற்கு பிறகு நர்த்தகி, ரா ரா, தேசிங்குராஜா, படங்களில் நடித்தார். என்றாலும் மைனா அளவிற்கு படங்கள் அமையவில்லை.தற்போது உதயநிதி, நயன்தாரா நடித்து வரும் நண்பேண்டா படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். உதயநிதியுடன் நீலாம்பரி ரேஞ்சுக்கு மோதுகிற கேரக்டராம். இந்த படத்துக்கு பிறகு தனது சினிமா கேரியர் டாப் கியரில் போகும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் சூசன்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget