விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நாயகனாக அறிமுகமாகும் படம் 'சகாப்தம்'. இப்படத்தின் நாயகியாக பிரபல மாடலான நேகா
ஹிங் அறிமுகமாகிறார். இப்படத்தை சுரேந்திரன் இயக்க, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். கடந்த வாரம் இப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வழக்கம் போல விமர்சிக்கப்பட்டு வருகின்றன. விஜயகாந்தின் மகன் சண்மகப்பாண்டியனும் அந்தக் கால விஜயகாந்தைப் போலவே இருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் நேகா ஹிங் கடந்த வாரம் பலரின் கவனத்தை ஈர்த்தார். யார் இந்த நேகா ஹிங், ஹிங்-கா அல்லது சிங்-கா என்றெல்லாம் கூட சிலர் அவரின் பெயரிலேயே குழப்பமடைந்தார்கள்.
நேகா ஹிங் இதற்கு முன் 70களின் கடைசியில் அறிமுகமாகி முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ரதி அக்னிஹோத்ரி மகன் தனுஜ் விர்வானி அறிமுகமான 'லவ் யு சோனியோ' படத்தில் நாயகியாக அறிமுகமானவர். அந்தப் படம் 2010ம் ஆண்டு வெவிந்தது. அதற்குப் பிறகு அவர் நடிக்கும் படம் தமிழ்ப் படமான 'சகாப்தம்' தான்.
2010ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் பட்டம் வென்றர் நேகா ஹிங். தற்போது நேகா தெலுங்கின் பிரபல இயக்குனரான ராஜமௌலியின் தந்தையான விஜேயேந்திர பிரசாத் இயக்கி வரும் புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் பல ஆக்ஷன் காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறதாம். இந்த இரண்டு படங்களும் வெளிவந்த பிறகு தென்னிந்தியத் திரையுலகில் பேசப்படும் நட்சத்திரமாக நேகா ஹிங் உயர வாய்ப்புள்ளது

கருத்துரையிடுக