இந்த வருடம் டபுள் சென்சுரி அடித்த கோலிவுட்

2014ம் ஆண்டு முடிவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் இதுவரை வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 200-ஐ தாண்டி புதிய சாதனை
ஒன்றைப் படைத்துள்ளது. கடந்த வெள்ளியன்று வெளிவந்த படங்களுடன் எண்ணிக்கை 200ஐ தொட்டது.

1931ம் ஆண்டு ஆரம்பமான தமிழ்த் திரைப்பட வரலாற்றில் 200 படங்கள் வெளிவருவது இதுவே முதல் முறை. கடந்த ஆண்டு 150க்கும் கொஞ்சம் அதிகமான படங்களே வெளிவந்தது. 2012ல் 130க்கும் மேற்பட்ட படங்களும், 2011ல் 125க்கும் மேற்பட்ட படங்களும் வெளிவந்தது. இந்த ஆண்டைப் பொறுத்தவரையில் வாரா வாரம் சராசரியாக நான்கைந்து படங்கள் வெளிவந்த காரணத்தால் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டியுள்ளது. இந்த வருடத்தின் கடைசியில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளிவரும் நான்கு படங்களின் எண்ணிக்கையையும் கணக்கில் கொண்டால் 205 படங்கள் வரை எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புள்ளது.

இந்த அளவிற்கு படங்கள் வெளிவந்தாலும் வெற்றிகரமாகவும், வசூல் ரீதியாகவும் ஓடிய படங்களின் எண்ணிக்கை 20ஐக் கூடத் தாண்டவில்லை என்பதே அதிர்ச்சிகரமான உண்மை. மிகப் பெரும் நட்சத்திரங்களின் படங்கள் கூட சுமாராக இருந்த காரணத்தினால் பல கோடி ரூபாயை வசூலிக்க வேண்டிய படங்கள் சில கோடி ரூபாயை மட்டுமே வசூலித்து தோல்விப் படங்களாக அமைந்தன. சில படங்கள் சினிமா என்ற விதத்தில் கூட சொல்ல முடியாத அளவிற்குத்தான் மோசமான தரத்தில் வெளி வந்தன. 

இதற்கெல்லாம் டிஜிட்டல் மாற்றம்தான் முழுமையான காரணம். அனுபவம் இல்லாதவர்களும், சினிமாவைப் பற்றிய அரிச்சுவடிக் கூடத் தெரியாதவர்களும் திரைப்படங்களை எடுக்க வந்து மொத்த திரையுலகத்தையுமே அழிக்கிறார்கள் என ஒரு சாரார் கடுமையாக குற்றம் சாட்டுகிறார்கள்.

பல லட்சம் பேருக்கு வாய்ப்பை நேரடியாகவும், மறைமுகமாகவும் வழங்கி வரும் தமிழ்த் திரையுலகம் திருட்டு விசிடி, டிக்கட் கட்டண உயர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளால் தடுமாறிக் கொண்டு வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை. அவற்றை 2015ம் ஆண்டிலாவது தீர்த்து வைத்தால்தான் இனி வரும் காலங்களிலும் தமிழ்த் திரையுலகம் தலை நிமிர்ந்து நிற்க முடியும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget