உடலை மாற்ற விரும்பும் அனுஷ்கா

தென்னிந்தியத் திரையுலகில் அடுத்த சில மாதங்களுக்கு அதிகம் பேசப்படும் ஒரே நாயகியாக இருக்கப் போகிறார் அனுஷ்கா மட்டுமே. இன்னும்
சில நாட்களில் ரஜினிகாந்துடன் 'லிங்கா', அடுத்த மாதம் அஜித்துடன் 'என்னை அறிந்தால்', தெலுங்கில் முதலில் 'ருத்ரமா தேவி', பின்னர் 'பாகுபலி' என மிகப் பிரம்மாண்டமான படங்களின் நாயகியாக அடுத்தடுத்து அவருடைய படங்கள் வெளிவர இருக்கின்றன. வேறு எந்த ஹீரோயின்களுக்கும் இப்படி ஒரே சமயத்தில் இப்படிப்பட்ட பிரம்மாண்டமான படங்கள் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்பேயில்லை. 30 வயதைக் கடந்த பின்னும் அனுஷ்காவிற்கு இப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைத்து வருவதை பலரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லையாம்.

நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட அனுஷ்கா, அடுத்து கமல்ஹாசன், விக்ரம் வழியில் நடிப்பிற்காக அவரது உடலை மிகவும் மாற்றிக் கொள்ளப் போகிறாராம். விரைவில் தெலுங்கில் கே.பிரகாஷ் என்பவரது இயக்கத்தில் அனுஷ்கா இரண்டு வேடத்தில் நடிக்கப் போகிறாராம். அதில் ஒரு கதாபாத்திரத்தில் 100 கிலோ எடை கொண்ட குண்டான பெண்ணாக ஒரு கதாபாத்திரம் இடம் பெறப் போகிறதாம். அந்தக் கதாபாத்திரத்திற்காகத்தான் அனுஷ்கா அவரை மாற்றிக் கொள்ளப் போகிறாராம். பொதுவாக, கமல்ஹாசன், விக்ரம் போன்ற நடிகர்கள்தான் கதாபாத்திரங்களுக்காக தங்களை மிகவும் வருத்திக் கொள்வார்கள். அவர்களது வழியில் முதன் முறையாக ஒரு ஹீரோயின் அப்படி மாற்றிக் கொள்ள இருப்பதுதான் தற்போது டோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
அனுஷ்காவிற்கு அவருடைய வீட்டில் மாப்பிள்ளையைப் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அனுஷ்காவின் இந்த திடீர் மாற்றம் நடைபெறுமா என்பதும் ஒரு பக்கம் யோசிக்க வேண்டிய ஒன்று என்கிறார்கள். உடலை ஏற்றி, பின்னர் இளைக்க வைப்பதன் மூலம் பழைய அழகு கெடவும் வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். அனுஷ்கா தற்போது நடித்து வரும் 'பாகுபலி' படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் இது நடக்குமா நடக்காதா என்பது தெரியவரும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget