நெருக்கமான காட்சியில் நடிச்சா தப்பா செனாஜ் டிரசரிவாலா

எதுருலெனி மனிஷி என்ற தெலுங்கு படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் க்யூட் அண்ட் ஸ்வீட் நடிகை செனாஜ் டிரசரிவாலா.
அப்படம் அவருக்கு ஓரளவுக்கு யெயர் பெற்று தர, இஷ்க் விஷ்க் என்ற படத்தின் மூலம் இந்தி திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார். ஒரு சிறிய இடைவௌிக்கு பிறகு தற்போது மெயின் அவுர் மிஸ்டர் ரைட் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு நெகட்டீவ் விமர்சனங்கள் வந்தாலும் அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன் என கூலாக பதிலளிகிறார் செனாஜ்., தொடர்ந்து அவரது கூலான பேட்டி...

''மெயின் அவுர் மிஸ்டர் ரைட்'' என்ற படத்தில் ஆலியா என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். கரண் ஜோகர் படங்களை போன்று இப்படத்தில் நான் நடித்துள்ளேன். ரொம்ப ஸ்டைலிஷாக நடித்துள்ளேன். சினிமாவில் வருபவரை போன்று எனக்கு வாழ்க்கை துணையாக வருபவர் சரியான நபராக இருக்க வேண்டும் என்பதும், அவரதை தேடுவதும் தான் படத்தின் கதை.

பருண் சோப்தி சிறந்த நடிகர்

முதன்முறையாக பருண் சோப்தி பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இது அவரது முதல் படம், முதல்படத்திலேயே சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் பருணின் கேரக்டரும் அருமையானது. இதுவரை நான் நடித்த படங்களில் இப்படியொரு ரோலில் நான் நடித்தது கிடையாது. எனது எல்லா படங்களை போன்று இந்தப்படத்திலும் நான் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளேன்.

நிஜவாழ்விலும் மிஸ்டர் ரைட்டாக இருக்கணும்

மெயின் அவுர் மிஸ்டர் ரைட் படத்தில் வரும் ஆலியா போன்று நிஜவாழ்க்கையிலும் நான் மிஸ்டர் ரைட் பெர்சனை எதிர்பார்க்கிறேன், படத்தில் வரும் மிஸ்டர் ரைட் போன்று ஹேண்ட்சம்மாக இல்லாவிட்டாலும், என்னை உண்மையாக நேசிப்பவராக, என் மீது அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும். இந்த இரண்டை விட மிக முக்கியமானது, அவர் என்னையும், நான் அவரையும் புரிந்து கொண்டவராக இருக்க வேண்டும். இது எல்லாவற்றையும் விட என்னை எப்போதும் மகிழ்ச்சியாகவும், சிரித்தபடியே இருக்கும்படியாக பார்த்து கொள்பவராக இருக்க வேண்டும்.

தோல்வி படங்களை பற்றி கவலையில்லை

நான் நிறைய படங்களில் நடித்துவிட்டேன். இதில் சில படங்கள் வெற்றி பெறவில்லை, தோல்வி படங்களாக அமைந்து இருக்கின்றன. ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படுவது கிடையாது. 100 சதவீதம் நான் எனது உழைப்பை கொடுத்து வருகிறேன். என் சினிமா கேரியரில் ''இஷ்க் விஷ்க்'' மற்றும் ''டெல்லி பெல்லி'' படங்கள் பெரிய சூப்பர் ஹிட் படங்களாக அமைந்துள்ளது. அதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் அதிர்ஷ்டக்காரி

சினிமாவில் நான் மிகவும் அதிர்டக்காரி என்று தான் சொல்ல வேண்டும். எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் சினிமாவிற்கு வந்தேன். எம் டிவி., தான் எனது திறமையை வௌிக்காட்டியது. அதன்மூலமாக ''இஷ்க் விஷ்க்'' படவாய்ப்பு கிடைத்து. தொடர்ந்து நிறைய படங்களில் நடித்தேன். இடையில் சிலகாலம் எந்தவொரு படவாய்ப்பும் இன்றி இருந்தேன். ஆனால் அதைப்பற்றி கவலைப்படவில்லை, சினிமாவில் ஏற்ற - இறக்கம் இருக்கும்.

நெருக்கமான காட்சிகளில் நடிப்பது தப்பில்லை

இன்றைக்கு சினிமாவில் அதிகமாக நெருக்கமான காட்சிகள் வருவது உண்மை தான். அதிலும் முத்தக்காட்சிகள் சர்வசாதரணமாகிவிட்டது. என்னைப்பொறுத்த வரை இதுபோன்ற காட்சிகளில் நடிப்பது தவறு கிடையாது. காரணம் கதைக்கு அது அவசியமாகிறது. ஆனால் சிலபேர் ரசிகர்களை குஷிப்படுத்த இதுபோன்ற காட்சிகளை தவறாக ஆபாசமாக காட்டி விடுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் பெண்களை செக்ஸ் பொம்மையாக காண்பிக்கின்றனர்.
இவ்வாறு செனாஜ் கூறியுள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget