சின்னத்திரையில் காமெடி நடிகையாக அறிமுகமான மதுமிதா ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார். சினிமாவில்
காமெடி நடிகைளுக்கு பஞ்சம் இருப்பதால் மதுமிதா ஒரு ரவுண்ட் வருவார் என்றே கணிக்கப்பட்டது. ஓகே ஓகேவுக்கு பிறகு இதற்குதானே ஆசைப்பட்டாய் படம் அவருக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. அதில் தாதாவின் மனைவி பேபியாக நடித்தது பெரும் வரவேற்பை பெற்றது.
கோவை சரளா, மனோரமா மாதிரி தனி காமெடி நடிகையாக உருவெடுப்பார் என்று கருதப்பட்ட மதுமிதாவுக்கு பிறகு பெரிய வாய்ப்புகள் இல்லை. இதனால் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பி விட்டார் தற்போது மடிபாக்கம் மாதவன், சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடர்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். என்றாலும் முனி 3யில் முக்கியமான காமெடி ரோலில் நடித்திருக்கிறார். அந்த படம் வெளிவந்தால் தனக்கு நல்ல வாய்ப்புகள் அமையும் என்று நம்புகிறார்.

கருத்துரையிடுக