TNPSC GROUP - IV தேர்வுக்கு வரலாற்று பாடங்களை எப்படி படிக்க வேண்டும்

குரூப்-4 தேர்வில் இந்திய வரலாறு, தமிழக வரலாறு, பண்பாடு, இந்திய தேசிய இயக்கம் மற்றும் புவியியல் ஆகிய பிரிவுகளில் இருந்து
குறைந்தது 10 முதல் 15 கேள்விகள் வரை கேட்கப்படுகின்றன. முந்தைய வினாத்தாள்களை ஆய்வு செய்தால் இந்த உண்மை தெரிய வரும். இவை எல்லாமே 10-ம் வகுப்பு வரையுள்ள இந்திய வரலாறு, தமிழக வரலாறு போன்றவற்றைத்தான் ஆதாரமாக கொண்டுள்ளன.

இந்த கேள்விகளை எதிர்கொள்ள இந்திய வரலாறு என்பதை பழங்கால இந்தியா, மத்திய இந்தியா, நவீன இந்தியா என 3 பகுதிகளாகப் பிரித்து அதன் வரலாற்றுச் சம்பவங்களை தொடர் வரிசையாகப் படிக்க வேண்டும்.
 பழங்கால இந்தியா பகுதியில், கற்காலம், சிந்து சமவெளி நாகரீகம், புத்த மதம், சமணம் போன்ற மதங்களின் வரலாறு, அவை ஏற்படுத்திய மாற்றங்கள், தொடர்ந்து ஆட்சிபுரிந்த மவுரியப் பேரரசு, அசோகர், கனிஷ்கர், குப்தர்கள், வர்த்தன வம்சத்தினர், சாளுக்கியர்கள், அவர்களின் ஆட்சிமுறைகள், மன்னர்களின் முழுவிவரம், சாதனைகள் மற்றும் சீர்திருத்தங்களை குறிப்பெடுக்க வேண்டும்.

மத்திய இந்தியா பகுதியில் இந்தியாவை முதன்முதலாக ஆண்ட டெல்லி சுல்தான்கள், தொடர்ந்துவந்த கில்ஜி வம்சம், துக்ளக் வம்சம், லோடி வம்சம் வரையிலும், பாமினி அரசு, விஜயநகரப் பேரரசு, முகலாயப் பேரரசை நிறுவிய பாபர் முதல் ஹூமாயூன், ஷெர்ஷா, அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான், அவுரங்கசீப் வரையிலும், மராட்டியர்கள், சீக்கியர்கள் ஆட்சிமுறை, சீர்திருத்தங்கள் முக்கியமானவை.

நவீன இந்தியா பகுதியில், இந்தியாவுக்கு முதன்முதலாக வருகை தந்த போர்ச்சுக்கீசியர்கள், தொடர்ந்து வந்த பிரெஞ்சு, டச்சுக்காரர்கள் மற்றும் 1600-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி வணிகம், இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வருகை முதல் 1947 ஆகஸ்ட் 15-ம் நாள் வரை நம் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளை பகுதி வாரியாக பிரித்துப் படிக்க வேண்டும்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறை பொருத்தவரையில், 1857 முதல் 1947 வரையில் என்னென்ன முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்தன என்பதை காலத்தோடு அட்டவணை தயாரித்து நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். 

உதாரணம்:

1857 - வேலூர் சிப்பாய் கலகம் 1885 - இந்திய தேசியகாங்கிரஸ் தோற்றம் 1905 - வங்கப்பிரிவினை, சுதேசி இயக்கம் 1906 - முஸ்லீம் லீக் கட்சி தோற்றம் 1917 - ஆகஸ்ட் அறிக்கை 1920 - ஒத்துழையாமை இயக்கம்
மேலும், இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய காலம் (1885) முதல் சுதந்திரப் போராட்டத்துக்கு தலைமை வகித்த அன்னி பெசன்ட் அம்மையார், திலகர், நேரு, காந்திஜி, நேதாஜி மற்றும் தமிழ்நாட்டு சுதந்திரப் போராட்ட வீரர்களான பாரதியார், திருப்பூர் குமரன், காமராஜர், ராஜாஜி, ஈ.வெ.ரா. முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டோர் பற்றி குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். 

அதைத்தொடர்ந்து, வேலூர் கிளர்ச்சி (1806), சிப்பாய் கலகம் (1857), சூரத் காங்கிரஸ் நிகழ்வுகள், ரவுலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, ஹண்டர் கமிஷன், இல்பர்ட் சட்டம், மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம், இரட்டை ஆட்சிமுறை, அவகாசியிலிக்கொள்கை, ரயத்வாரிமுறை, கிலாபத் இயக்கம், சவுரி சவுரா நிகழ்வு, சுயராஜ்ஜிய கட்சி தோற்றம், சைமன் கமிஷன், 3 வட்ட மேஜை மாநாடுகள், கிரிப்ஸ் தூதுக்குழு, முதல் மற்றும் 2-ம் உலகப்போரில் இந்தியாவின் நிலைப்பாடு, அதன் விளைவுகள், ஒத்துழையாமை இயக்கம், உப்புச்சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், சுதந்திரப் போராட்ட வீரர்களில் மிதவாதிகள், பயங்கரவாதிகள் விவரங்களையும் குறிப்பெடுக்க வேண்டியது அவசியம். அதன்பின்பு சமுதாயச் சீர்திருத்த இயக்கங்களான பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், ராமகிருஷ்ணா, அலிகார் இயக்கங்கள் பற்றிய முழு தகவல்கள். பொதுவாக, அனைத்துப் போட்டித்தேர்வுகளிலும் இந்தியப்பகுதியில் இருந்துதான் நிறைய கேள்விகள் கேட்கப்படுகின்றன.

மேற்சொன்ன பாடங்களில் புள்ளி விவரங்கள், எந்தெந்த ஆண்டு, எந்தெந்த சம்பவம் நிகழ்ந்தது, பங்கேற்றவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால், இப்பிரிவு தொடர்பான கேள்விகளை குழு விவாதம் (Group Discussion) மூலம் படிப்பது மிகுந்த பயன்தரும். 5 நபர்கள் கொண்ட ஒரு பிரிவில், ஒவ்வொருவரும் ஒரு பாடப்பிரிவை, உதாரணத்துக்கு தமிழகம் பற்றி ஒருசிலரும், சுதந்திரப் போராட்ட வீரர்கள் விவரம் குறித்து ஒருவரும், போக்குவரத்து வசதிகள் பற்றி ஒருவரும் நவீனகால இந்தியா தொடர்பாக மற்றொருவரும் இப்படி குழு விவாதம் செய்துகொண்டால் அனைத்துப் பாடங்களும் மனதில் எளிதாக நிற்கும். இந்த முறையை மேற்கொண்டு வெற்றிபெற்றதாக தேர்வில் வெற்றிபெற்ற பலர் தெரிவித்துள்ளனர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget