தமிழ் சினிமாவை எப்போதும் கனவு தேவதைகள் ஆண்டு கொண்டிருந்திருக்கிறார்கள். பானுமதி, பத்மினி, சரோஜாதேவி, ஜெயலலிதா, ஸ்ரீதேவி,
ஸ்ரீப்ரியா, குஷ்பு, நதியா, ஜோதிகா, நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா, சமந்தா, ஹன்சிகா என இந்த கனவு தேவதைகளின் பட்டியல் ரொம்ப பெரியது.
2015ம் ஆண்டின் கனவு தேவதை யார்? யார் ஆட்சி செய்யப்போகிறார்கள் என்ற கேள்வி மில்லியன் டாலர் கேள்விதான். ஆனாலும் கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்த்து அலசி ஆராய்ந்தால் அந்த தேவதைகள் கண்ணுக்குத் தெரிகிறார்கள்.
சமந்தா
கடந்த ஆண்டு சமந்தா அஞ்சான், கத்தி என்ற இரண்டு படங்களில் நடித்தார். ஒன்று தோல்வி, ஒன்று ஹிட். ஆனாலும் சமந்தாவின் கை ஓங்கியேதான் இருந்தது. தற்போது விக்ரமுடன் பத்து எண்றதுக்குள்ள நடித்து முடித்திருக்கிறார். வேல்ராஜ் இயக்கும் படத்தில் தனுசுடன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
நயன்தாரா
நயன்தாரா இது கதிர்வேலன் காதல், நீ எங்கே என் அன்பே படங்களில் நடித்தார் இரண்டுமே சரியாக போகவில்லை. ஆனாலும் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இடத்திலிருந்து அவர் சறுக்க வில்லை. உதயநிதியுடன் நண்பேன்டா, ஜெயம்ரவியுடன் தனியருவன், 5 வயது குழந்தைக்கு தாயாக மிட் நைட் எக்ஸ்பிரஸ். விஜய் சேதுபதியுடன் நானும் ரவுடிதான், சூர்யாவுடன் மாஸ், சிம்புவுடன் இது நம்ம ஆளு என்று 2015ல் பிரித்து மேய இருக்கிறார்.
ஹன்சிகா
ஹன்சிகாவுக்கு 2014 லக்கி ஆண்டு. மான் கராத்தே, அரண்மனை, மீகாமென் படங்களில் நடித்தார் மூன்றுமே ஹிட். 2015ல் விஷாலுடன் ஆம்பள, சிம்புவுடன் நடித்த வாலு, ஜெயப்பிரதா மகனுடன் நடித்த உயிரே உயிரே, ஜெயம்ரவியுன் நடிக்கும் ரோமியோ ஜூலியட், விஜய்யுடன் நடித்து வரும் படம், இதயம் முரளி, வேட்டை மன்னன் படங்கள் வெளிவரும். ஹன்சிகாவின் 2015ம் ஆண்டின் டைரியும் புல்.
அனுஷ்கா
தென்னிந்தியாவில் இன்றைய தேதியில் நம்பர் ஒன் நடிகை அனுஷ்கா தான். 100 கோடியில் ருத்ரமாதேவி, 200 கோடியில் பாகுபாலி என அனுஷ்காவின் விஸ்வரூபம் 2015ல் பெரிதாக இருக்கப்போகிறது. ஆனாலும் தமிழில் அவர் பங்கு குறைவுதான். கடந்த ஆண்டில் லிங்கா மட்டுமே அவரது படம். 2015ல் அஜீத்துடன் நடிக்கும் என்னை அறிந்தால் மட்டுமே. அதற்கு பிறகு புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை. பாகுபாலி, ருத்ரமாதேவிக்கு பிறகு சினிமா விட்டு விலகுகிறார் என்ற தகவலும் இருக்கிறது.
ப்ரியா ஆனந்த், ஆனந்தி
கடந்த ஆண்டு ப்ரியா ஆனந்த், அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்களில் நடித்தார், தற்போது வை ராஜா வை படத்தில் நடித்து வருகிறார்.
ஆனந்தி பொறியாளன், கயல் படங்களில் நடித்தார். தற்போது வெற்றிமாறனின் விசாரணை, சற்குணம் இயக்கும் படம், ஜி.வி.பிரகாசுடன் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படங்களில் நடிக்கிறார்.
லட்சுமி மேனன், நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகிர்தண்டா படங்களில் நடித்தார் மூன்றுமே ஹிட் படங்கள். ஆனாலும் 2015ல் அவருக்கு கொம்பன் தவிர வேறு படங்கள் இல்லை. ஐஸ்வர்யா திருடன் போலீஸ், பண்ணையாரும் பத்மினியும், ரம்மி படங்களில் நடித்தார். தற்போது இடம் பொருள் ஏவல், காக்கா முட்ட, குற்றமும் தண்டனையும் படங்களில் நடித்து வருகிறார்.
ப்ரியா ஆனந்த், ஆனந்தி, லட்சுமி மேனன், ஆனந்தி, ஐஸ்வர்யாக ஆகியோர் குறிப்பிடத்தகுந்த நம்பிக்கைகள். ஆனால் அவர்கள் கனவு தேவதை பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.
தமன்னா வீரத்திலும், காஜல் அகர்வால் ஜில்லாவிலும் நடித்தாலும் அவர்களையும் தாண்டி தமிழ் சினிமாவின் 2015ன் கனவு தேவதை போட்டியின் இறுதி சுற்றுக்கு வருகிறவர்கள் நயன்தாராவும், ஹன்சிகாவும்தான்.
ஹன்சிகா 2014ல் நடித்த படங்களில் மீகாமனில் மட்டும் கொஞ்சம் நடித்திருந்தார். அரண்மனையில் பேயாக பயம் காட்டினார். மான்கராத்தேவில் அழகு பொம்மையாக வந்தார். அடுத்து வரப்போகிற படங்களில் அவர் என்ன செய்வார் என்ற பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
2015ம் ஆண்டின் கனவு தேவதை நயன்தாராதான். 2014ம் ஆண்டில் அவர் நடித்த இது கதிர்வேலன் காதல் காமெடி படம். தோல்வி படம். அதிலும் தனது நடிப்பு முத்திரை பதித்திருந்தார். இந்தி கஹானி ரீமேக்கான நீ எங்கே என் அன்பே -யில் பண்பட்ட நடிப்பை தந்திருந்தார். 2015ல் வெளிவரப்போகும் நண்பேன்டா படம் காமெடி படம். ஆனால் டாப்பில் இருக்கும்போதே ஒரு புதுமுக இயக்குனரின் ஸ்கிரிப்டில் 5 வயது குழந்தைக்கு தாயாக நடிக்கும் துணிச்சல்தான் நயன்தாரவின் ஸ்பெஷல், சூர்யாவுடன் மாஸ் பக்கா கமர்ஷியல் படம். வளர்ந்து வரும் நடிகர் விஜய் சேதுபதியுடன் நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கிறார். தன் மாஜி காதலன் சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் நடிக்கிறார். இப்படி பல களங்களில் நின்று விளையாடும் நயன்தாராதான் 2015ம் ஆண்டின் கனவு தேவதை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கருத்துரையிடுக