கோலிவுட் நாயகிகளின் புத்தாண்டு திட்டம்

ஒவ்வொரு ஆண்டும் புதுவருடம் பிறக்கும்போது பெரும்பாலானவர்கள் சபதமேற்று அந்த லட்சியத்தை நோக்கி அந்த வருடம் முழுவதும்
பயணிப்பார்கள். அந்தவகையில், தமிழ் சினிமாவின் நட்சத்திரங்கள் சிலர், 2015ம் ஆண்டில் தாங்கள் என்னவெல்லாம் சபதமேற்றுள்ளார்கள், எந்தமாதிரி திட்டம் வைத்துள்ளார்கள் என்பதை இங்கு நம்மிடம் தெரிவித்துள்ளனர். இதோ...

ஷிவதா நாயர்

நான் நினைப்பது எதுவும் நடப்பது கிடையாது, அதனால் நான் நியூ இயருக்கு எந்த சபதமும் எடுப்பது கிடையாது. எது நடக்கணும் இருக்கோ அது கண்டிப்பாக நடக்கும், 2015-ல் இன்னும் கூடுதலாக உழைப்பேன் என்று நினைக்கிறேன்.

அட்டகத்தி ஐஸ்வர்யா

நான் வந்து நியூ இயருக்கு எந்த பிளானும் பண்ணுவது கிடையாது, ஏனென்றால் அதை என்னால் கடைபிடிக்க முடியாது. 2014-ல் நிறைய இயற்கை சீற்றங்கள் நிறைய வந்தது. சினிமாவை பொறுத்தவரை கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா போன்ற திறமையானர்களை தமிழ் சினிமா இழந்தது. 2015-ல் நிறைய நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ரம்பா

வாழ்க்கையில் நாம் எண்ண திட்டமிட்டாலும் கடவுள் ஒரு திட்டம் வைத்திருப்பார், அதுதான் நடக்கும். நிறைய புகழ் பேரு எல்லாம் பார்த்தாகிவிட்டது. ஒரு நடிகையா குடும்பத்தோடு அமைதியான சூழலில் வாழ விரும்புகிறேன், இந்தாண்டு எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது. 2015ம் ஆண்டு இரண்டாவது குழந்தையோடு வாழ்க்கை பயணிக்க இருக்கிறது.

விதார்த்

2014 ரொம்ப நல்ல வருடமாக அமைந்தது. நிறைய படங்கள் நடித்தேன், எனது தம்பிகள் தயாரிப்பாளர்களாகி ஒரு படத்தை முடித்துவிட்டோம், இந்த வருடம் உலா, விழித்திரு, குற்றப்பத்திரிக்கை,தெனாவட்டு இயக்குநரின் கதிர் படம் இப்படி கைவசம் 6 படங்கள் உள்ளன. தயாரிப்பாளர்களுக்கு என்னால் எந்த நஷ்டத்தையும் கொடுக்காதபடி நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து நடிப்பதே எனது நோக்கம், லட்சியம்.

பிரஷாந்த்

101 சதவீதம் சினிமாவுக்காக இரவு பகலாக வேலை பார்க்க ஆசைப்படுகிறேன். 6 மாதத்திற்கு ஒருமுறை ஒரு நல்லபடம் வௌிவரும் முயற்சியில் இருப்பேன். 2015ம் ஆண்டு எனக்கு சாதனை புரியும் சாஹகச ஆண்டாக இருக்கும். அதற்காக நாளை முதலே உழைக்க தொடங்குவேன்.

மகிமா

சென்ற ஆண்டு எனக்கு கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தது. சரியான வெற்றி கிடைக்கவில்லை, என்னோடு முயற்சி இருந்தும் சரியான படங்கள் அமையவில்லை, இந்தவருடம் என்னை ரொம்ப தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். உழைப்பு தவிர வேறு எதையும் நான் மனதில் வைத்து கொள்ளவில்லை, உழைப்பு இருந்தாலே வெற்றி தானே வரும். இனி ஒரு நிமிடம் கூட சினிமாவில் நான் வேஸ்ட் பண்ணமாட்டேன். 2015ம் ஆண்டில் வெற்றி பெற்றே தீருவேன்.

விஜய் வஸந்த்

இப்போதைக்கு என்னோட வாழ்க்கை நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. 2014-ல் என்னமோ நடக்குது படம் என்னை ஒரு நடிகனாக கொஞ்சம் அடையாளம் காட்டியது. 2015-ல் ஜிகினா, சிகண்டி என வரிசையாக சில படங்கள் கமிட் பண்ணியுள்ளேன். ஒருபடம் முடியும் தருவாயில் உள்ளது. எந்த வருடமும் நான் சபதம் ஏற்று கொண்டது கிடையாது. ஒருநாளைக்கு உணர்ச்சிவசப்பட்டு எடுத்தால் அதை வருடம் முழுக்க எடுப்பது கிடையாது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget