இந்த ஆண்டில் யார் கனவுக்கன்னி யார் என்பது அவர்கள் நடிக்கும் படங்களின் வெற்றியைப் பொறுத்தே அமையும். ஹீரோக்களைப்
பொறுத்தவரையில் ஒரு படம் ஓடவில்லை என்றால் கூட அடுத்த படத்தில் எப்படியாவது எழுந்து நின்று விடுவார்கள். அவர்களுக்குத் தொடர்ந்து பட வாய்ப்புகளும் இருந்து கொண்டேயிருக்கும். ஆனால், ஹீரோயின்களைப் பொறுத்தவரையில் ஒரு படம் வெற்றி பெற்றால் மட்டுமே தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும். ஒரு படம் தோல்வியடைந்து விட்டால், அதன் பின் அவர்களைத் தேடி வரும் வாய்ப்புகள் குறைந்து விடும். ஒரு சிலருக்குத்தான் விதிவிலக்காக தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த ஆண்டைப் பொறுத்தவரையில் தமிழில் பல முன்னணி நடிகைகளின் கைவசம் பல முக்கிய படங்கள் இருக்கிறது. முதலில் சீனியர் நடிகையான நயன்தாராவைப் பற்றிப் பார்ப்போம். அவர் தற்போது, 'நண்பேன்டா, மாயா, இது நம்ம ஆளு, தனியொருவன், நானும் ரௌடிதான்' என ஐந்து படங்களில் நடித்து வருகிறார். அனுஷ்கா, 'என்னை அறிந்தால்' படத்தில் மட்டும் நடித்து வருகிறார். அவருடைய தெலுங்குப் படங்களான 'பாகுபலி, ருத்ரமாதேவி' தமிழிலும் வெளியாக உள்ளன. த்ரிஷா கடந்த ஆண்டே நடித்து முடித்துள்ள 'பூலோகம்' எப்படியும் இந்த ஆண்டு வெளிவந்து விடும். அதோடு 'என்னை அறிந்தால், அப்பா டக்கரு' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தமன்னா, 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தில் நடித்து வருகிறார். இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'பாகுபலி' படமும் தமிழில் வெளியாக உள்ளது. காஜல் அகர்வால் 'மாரி' படத்தில் நடித்து வருகிறார். சமந்தா 'பத்து எண்றதுக்குள்ள' படத்தில் நடித்து வருகிறார். விரைவில் தனுஷ் ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார்.
ஸ்ருதிஹாசன், விஜய்யின் 'புலி' படத்திலும், கார்த்தி ஜோடியாக ஒரு புதிய படத்திலும் நடிக்க உள்ளார். ஹன்சிகா நடித்து விரைவில் 'ஆம்பள' படம் வெளியாக உள்ளது. அதோடு, “வாலு, உயிரே, ரோமியோ ஜுலியட், புலி, வேட்டை மன்னன்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கொஞ்ச நாள் காணாமல் போன அஞ்சலி தற்போது, “அப்பா டக்கரு, மாப்பிள்ளை' சிங்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் நாயகியாக நடித்து பல மாதங்களாக வெளியாகாமல் இக்கும் 'மதகஜ ராஜா' இந்த ஆண்டாவது வெளியாகுமா என்பது தெரியவில்லை.
ஆன்ட்ரியா, “உத்தம வில்லன், புதிய திருப்பங்கள், இது நம்ம ஆளு, விஸ்வரூபம் 2, தரமணி, வலியவன்,” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நந்திதா 'இடம் பொருள் ஏவல், உப்புக் கருவாடு' ஆகிய படங்களிலும், ஐஸ்வர்யா ராஜேஷ் 'இடம் பொருள் ஏவல், காக்கா முட்டை, குற்றமும் தண்டனையும்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்கள். ஸ்ரீதிவ்யா நடித்து விரைவில் 'காக்கி சட்டை' படம் வெளியாக உள்ளது. அதோடு, 'பென்சில், ஈட்டி' ஆகிய படங்களிலும் நாயகியாக நடித்து வருகிறார்.
லட்சுமி மேனன் 'கொம்பன், சிப்பாய்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 'கொம்பன்' விரைவில் வெளிவர உள்ளது. வேறு எந்த புதுப் படங்களும் இவருக்கு ஒப்பந்தமாகவில்லை. பிரியா ஆனந்த் நடித்துள்ள 'வை ராஜா வை' விரைவில் வெளிவர உள்ளது. இவருக்கும் வேறு எந்தப் புதுப் படங்களும் இல்லை. தன்ஷிகா 'கிட்னா, திறந்திடு சீசே, காத்தாடி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இவர்களைத் தவி சில புதுமுக நடிகைகளும் இந்த ஆண்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது அதிக படங்களில் நடிப்பவர்கள் என்று பார்த்தால், நயன்தாரா, ஹன்சிகா, ஆன்ட்ரியா ஆகியோர்தான் 'ரொம்ப பிஸி' ஆக இருக்கிறார்கள். அவர்களோடு கடந்த ஆண்டில் பிஸியாக இருந்த மற்றவர்களும் இந்த ஆண்டிலும் கைவசம் படங்களை வைத்திருப்பதால் கொஞ்சம் பிஸியாகத்தான் இருக்கிறார்கள்.

கருத்துரையிடுக