படத்துக்கு படம் பட்டைய கிளப்பும் ஹனிரோஸ்

ஜீவா நடித்த 'சிங்கம் புலி' படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மலையாள நடிகை ஹனிரோஸ்.. மலையாளத்தில் சின்னச்சின்ன ரோலில் நடித்துக்
கொண்டிருந்த ஹனிரோஸுக்கு 'த்ரிவேண்ட்ரம் லாட்ஜ்', 'ஹோட்டல் கலிஃபோர்னியா', 'அஞ்சு சுந்தரிகள்' என வரிசையாக நடித்த படங்கள் எல்லாம் ஹிட்டாக, தற்போது மலையாளத்தில் முக்கியமான நடிகையாகிவிட்டார்.

கடந்த வருடம் 'ரிங் மாஸ்டர்' படத்தில் திலீப்பிற்கு எதிராக வில்லித்தனம் காட்டிய ஹனிரோஸ், தற்போது ஜெயராம் நடிக்கும் 'ஸார் சி.பி' (Sir CP) என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். பத்தாம் கிளாசில் பெயிலான ஜெயராம் ஒரு ஹைடெக்கான காலேஜுக்கு பிரின்சிபல் ஆகவும் ஹனிரோஸ் அவரது பி.ஆர்.ஓ ஆகவும் நடிக்கின்றனர். சீனியர் நடிகைகளான சீமாவும் ரோகிணியும் ஜெயராமின் சகோதரிகளாக நடிக்கின்றனர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget