மலையாளத்தில் இருபது வருடங்களுக்கு முன், தனது நடிப்பால் அனைவரையும் அசரடித்த மஞ்சு வாரியர் நீண்ட இடைவெளிக்குப்பின் மறு
பிரவேசம் நிகழ்த்தியது 'ஹவ் ஓல்டு ஆர் யூ' படத்தின் மூலம் தான். பெண்ணின் பலத்தை, மகத்துவத்தை உணர்த்தும் விதமாக எடுக்கப்பட்டிருந்த இந்தப்படம் மஞ்சு வாரியருக்கு அனைவர் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுத் தந்தது. அது மட்டுமல்ல சமீபத்தில் பிரபல மலையாள நாளிதழ் ஒன்றும் அவருக்கு 'நியூஸ் மேக்கர்' என்கிற வித்தியாசமான பட்டத்தை வழங்கியுள்ளது.
அதாவது கடந்த வருடம் அதிகமாக செய்திகளில் அடிபட்டவர்கள், மீடியாவிற்கு அதிகம் தீனி போட்டவர்கள் என்கிற வகையில் பல பிரபலங்களை வாசகர்கள் மூலமாக பட்டியலிட்டு அதில் வெவ்வேறு துறையை சேர்ந்த நால்வரை மட்டும் இறுதியாக தேர்ந்தெடுத்துள்ளனர். அந்த நான்கு பேரில் ஒருவர் தான் மஞ்சு வாரியர். மஞ்சுவின் சினிமா ரீ என்ட்ரி, கணவர் திலீப்புடனான விவாகரத்து வழக்கு என வருடம் முழுவதும் செய்திகளில் இடம்பிடித்ததால் தான் அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது போலும்.

கருத்துரையிடுக