போலீஸ் கெட்டப்பில் அன்னலட்சுமி

கமலுடன் பத்து வருடங்களுக்கு முன்பு 'விருமாண்டி' படத்தில் ஜோடியாக நடித்து 'அன்னலட்சுமி' கதாபாத்திரத்தின் மூலம்
ரசிகர்களை கவர்ந்தவர் அபிராமி. திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகியவர் மீண்டும் பத்து வருடங்கள் கழித்து மலையாளத்தில் இந்த வருடம் வெளியான 'அப்போதேகேறி' என்கிற படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு திரும்பினார்.

அதன் பலனாக தமிழில் தற்போது ஜோதிகாவும் நீண்ட இடைவெளிக்குப்பின் என்ட்ரியாகும் 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' படத்தின் தமிழ் ரீமேக்கில் அவரது தோழியாக நடித்துவருகிறார் அபிராமி. அதுமட்டுமல்ல, தற்போது அபிராமிக்கு அவரே ஆச்சர்யப்படும்படியாக மலையாளத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் கிடைத்துள்ளது.

'தி காப் இன் ட்ரைவர் ஆன் டூட்டி' (The cop in Driver on Duty) என பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தில் கண்டிப்பும் கறாருமான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதற்காக சுரேஷ்கோபி, மம்முட்டி ஆகியோர் போலீஸ் வேடங்களில் நடித்த படங்களை டிவிடியில் போட்டுப்பார்த்து தனது கேரக்டரை இம்ப்ரூவ் செய்து வருகிறார். இவருடன் இளம் முன்னணி நடிகரான ஆசிப் அலி முக்கியமான கான்ஸ்டபிள் வேடத்தில் நடிக்கிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget