கோலிவுட் டார்லிங் நிக்கி கல்ராணி

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமும் தெலுங்குப்பட நிறுவனமான அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள டார்லிங்
படத்தில் கதையின் நாயகியாக நடித்திருப்பவர் நிக்கி கல்ராணி. இவர் யாராம்? 1983 என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் இவர். நிக்கி கல்ராணி நடித்த முதல் படமான 1983 சூப்பர் ஹிட்டானதைத் தொடர்ந்து ஓம் சாந்தி ஓசானா, வெள்ளி மூங்கா ஆகிய மலையாளப் படங்களில் நடித்தார். அவர் நடித்த இந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்!

நிக்கி கல்ராணி நடித்த மூன்று படங்களும் வரிசையாக ஹிட்டானதைத் தொடர்ந்து மலையாள சினிமாவின் ராசியான நடிகையாகி விட்டார் நிக்கி! அழகானவர், திறமையான நடிகை என்று பெயர் எடுத்ததோடு, ராசியான நடிகை என்ற பெயரும் வந்து சேர, நிக்கியைக் கொண்டாடத் தொடங்கியது மலையாளத் திரையுலகம். தற்போது மரியாத ராமன், ஒரு செகன்ட் கிளாஸ் யாத்ரா, ருத்ரசிம்ஹாசனம் என மூன்று மலையாள படங்களில் நடித்து வருகிறார் நிக்கி கல்ராணி!

தமிழில் அவர் நடித்துள்ள முதல் படம் - டார்லிங். பொங்கலுக்கு ரிலீசாகவிருக்கும் டார்லிங் படத்தில் பேயாக நடித்திருப்பது நிக்கிதான். டார்லிங் படம் வெளியாகும் முன்பே, யாகவராயினும் நா காக்கா என்ற தமிழ்ப்படத்திலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். ஆதி ஹீரோவாக நடிக்கும் படம் இது. நிக்கிக்கு மலையாளத்தில் வொர்க் அவுட்டான ராசி தமிழிலும் வொர்க்அவுட்டாகுமா?
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget