ஐ ரிலீஸ் புது சிக்கல்

ஐ படத்தை ரிலீஸ் செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில், விக்ரமின்
மிரட்டலான நடிப்பில் ஆஸ்கர் ரவிச்சந்திரன் அதிக பொருட் செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் ஐ. கிட்டத்தட்ட 3 வருடங்களாக உருவாகி வந்த ஐ படத்தை தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவே இப்படத்தை ஆவலாய் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது. ஐ படம் தற்போது ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது. வருகிற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி படம் ரிலீஸாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் மும்முரமாக நடந்து வந்த வேளையில், ஐ படத்தை வௌியிட இடைக்கால தடைவிதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதுப்பற்றிய விபரம் வருமாறு... பிக்சர்ஸ் ஹவுஸ் மீடியா என்ற நிறுவனத்திடம், ஐ பட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அந்த கடனை அவர் சொன்ன தேதியில் திருப்பி தரவில்லை. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், ஐ படத்தை ரிலீஸ் செய்ய 3 வாரம் காலம் இடைக்கால தடைவிதித்தார். மேலும் இதுதொடர்பாக வருகிற ஜனவரி 30ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவால் ஐ படம் ரிலீஸாவதில் சிக்கல் உருவாகியுள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget