தமிழில் அவன் இவன், பாகன் படங்களில் நடித்த ஜனனி அய்யருக்கு அதன்பிறகு எதிர்பார்த்தபடி படவாய்ப்புகள் இல்லை. அதனால் சில
மாதங்களாக கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தவர், பின்னர் மலையாளத்துக்கு இடம்பெயர்ந்தார். அப்போது 3 டாட்ஸ் என்ற மலையாள படத்தில் நடித்தார். அப்படம் வெற்றி பெற்றதால் அதையடுத்து அங்கு பல படங்கள் அவருக்கு கிடைத்தன.
அதனால், பின்னர் தமிழில் இருந்து தெகிடி என்ற படவாய்ப்பு கிடைத்தபோதும், அந்த படத்தில் நடித்து முடித்ததும் கேரளாவுக்கு விரைந்து விட்ட ஜனனி அய்யர், செவன்த் டே, மோசாரா உள்பட 3 படங்களில் நடித்தார். அந்த படங்களும் வெற்றி பெற்றதையடுத்து இப்போது அங்கு பிரபலமான நடிகையாகி விட்டார் அவர்.
விளைவு, சென்னைவாசியான ஜனனி அய்யர், இப்போது கேரளாவில் வீடு பிடித்து நிரந்தரமாக தங்கி விட்டார். தற்போது அவர் கைவசம் சில மலையாள படங்கள் உள்ளதாம். அதில் ஒரு படத்தில் ப்ருத்விராஜ்க்கு ஜோடியாக நடிக்கிறாராம். இந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் நடிக்க அவருக்கு சான்ஸ் கிடைத்திருக்கிறது.
இருப்பினும், என்னதான் இந்த படம் தமிழில் எனக்கு ஹிட்டாக அமைந்தாலும், மலையாளத்துக்கே முதலிடம் கொடுப்பேன் என்று சொல்லும் ஜனனி அய்யர், சினிமாவை விட்டே வெளியேறி விடலாமா? என்று நான் தடுமாறிக்கொண்டிருந்த நேரம் எனக்கு கைகொடுத்து மலையாள சினிமாதான். அதனால் எப்போதுமே மலையாள படங்களுக்குப்போக மீதமிருக்கும் கால்சீட்டைதான் மற்ற மொழிப்படங்களுக்கு கொடுப்பேன் என்கிறார் ஜனனி அய்யர்.

கருத்துரையிடுக