சினிமா ஆரம்பித்த காலம் தொட்டே பெரிய நடிகர்களின் படங்களில் அதிகளவு முதலீடு செய்தால், பெரிய லாபம் கிடைக்கும் என்ற
நம்பிக்கை வெகுகாலமாக இருந்தது. இது எண்ணம் தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி என எல்லா மொழிகளிலும் இருந்தது. ஆனால், அத்தகைய எண்ணம் சமீபகாலமாக தகர்த்து எறியப்பட்டுள்ளது. இப்போதெல்லாம், பெரிய நடிகர்களின் படங்களுக்கு அதிகளவு முதலீடு செய்து சின்ன லாபத்தை பெறுவதை காட்டிலும், திறமையான இளம் நடிகர்களை வைத்து சிறிய பட்ஜெட்டில் தயாரித்து பெரிய லாபம் பார்ப்பதே பேஷனாகி விட்டது.
அந்தவகையில் பாலிவுட்டில் சமீபகாலமாக திறமையான இளம் நடிகர்களின் வரவு அதிகமாகிவிட்டது. அவர்கள் நடித்து வரும் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானதோடு நல்ல வசூலையும் பெற்று தருகிறது. 2014ம் ஆண்டை பொறுத்தமட்டில் பெரிய நடிகர்களின் படங்களை காட்டி இளம் நடிகர்களின் படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. இவர்களின் ஆதிக்கம் 2015ம் ஆண்டும் தொடர்கிறது. இன்றைய தேதியில் பாலிவுட்டின் இளம் நடிகர்களை கொண்டு சுமார் 400 கோடிக்கு படங்கள் தயாராகி வருகின்றன. அந்த நடிகர்கள் யார் யார் என்பதை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
சித்தார்த் மல்கோத்ரா
ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் சித்தார்த் மல்கோத்ரா. எல்லா தரப்பினராலும் ரசிக்கப்பட்ட இப்படம் சித்தார்த்திற்கு நல்ல பெயரை பெற்று தந்தது. தொடர்ந்து அவர் நடித்த ஹசி தோ பேஸ், ஏக் வில்லன் போன்ற படங்களும் சூப்பர் ஹிட்டாக பாலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரம் ஆனார். தற்போது பிரதர்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஆதித்யா ராய் கபூர்
லண்டன் ட்ரீம்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான ஆதித்யா ராய் கபூர், ஆசிக்யூ 2 படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். தொடர்ந்து இவரது நடிப்பில் வௌியான தவாத்-இ-இஷ்க் படம் ஆதித்யாவின் நடிப்பை ஒரு புதிய பரிணாமத்தை காட்டியது. தற்போது பிட்டூர் என்ற படத்தில் கத்ரீனா கைப் உடன் நடித்து வருகிறார்.
வருண் தவான்
உதவி இயக்குநராக இருந்த வருண் தவான், ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல்படத்திலேயே அனைவரையும் கவர்ந்த வருண், தொடர்ந்து மெயில் தேரா ஹீரோ, ஹம்தி சர்மா கி துல்கனியா என தொடர் ஹிட் படங்களை கொடுக்க தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கும் இவர் மீதான நம்பிக்கை அதிகரித்தது. தற்போது பட்லாபூர் என்ற படத்தில் முற்றிலும் வித்தியாசமாக நடித்து வருகிறார். அதனைத்தொடர்ந்து ஏபிசிடி-2 படத்திலும் நடித்து வருகிறார்.
அர்ஜூன் கபூர்
பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் வாரிசு அர்ஜூன் கபூர். இஷாக்ஜதே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து கன்டே, 2 ஸ்டேட்ஸ் போன்ற ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். இப்போது தீவர் என்ற படத்தில் நடித்துள்ளார். இம்மாத இறுதியில் வௌியாக இருக்கிறது. இப்படம், தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ஒக்கடு படத்தின் ரீ-மேக் ஆகும்.
ஸ்ரத்தா கபூர்
பிரபல இந்தி வில்லன் நடிகர் ஷக்தி கபூரின் மகள் ஸ்ரத்தா கபூர். டீன் பட்டி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ஸ்ரத்தா, ஆஷிக்-2 படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். தொடர்ந்து ஏக் வில்லன், ஹைடர் படங்களிலும் வித்தியாசமான நடிப்பை வௌிப்படுத்தி பாலிவுட்டில் தனக்கு ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார். தற்போது ஏபிசிடி-2 படத்தில் நடித்து வருகிறார்.
ஆலியா பட்
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இப்போது பாலிவுட்டே பேசும் ஒரு இளம் நடிகை ஆலியா பட. ஸ்டூடண்ட் ஆப் தி இயர் முதல் படம். முதல் படமே சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், ஹம்டி சர்மா ஹி துல்கனியா போன்ற படங்களில் நடித்தார். இவர் நடித்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட்டானது. மேலும் அறிமுக ஹீரோயின் என்று கூட பார்க்காமல் முத்தக்காட்சியில் எல்லாம் தயங்காமல் நடிக்கிறார். தற்போது சாந்தார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கும் பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
டைகர் ஷெரப்
பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப்பின் மகன் டைகர் ஷெரப். சஜித் நட்வாலியா இயக்கத்தில், ஹீரோபண்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல்படமே அவருக்கு நல்ல பெயரை பெற்று தர இப்போது, மீண்டும் சஜித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
கிரீத்தி் சனோம்
கிரீத்தி சனோமும், ஹீரோபண்டி படத்தின் மூலம் தான் அறிமுகமானார். இப்போது அக்ஷ்ய் குமாருடன், ''சிங் இஸ் பிலிங்'', ஷாகித் கபூருடன் ''பர்ஷி'' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இவர்கள் தவிர இன்னும் பல திறமையான இளம் நடிகர்கள் பாலிவுட்டை ஆக்கிரமித்துள்ளனர். இந்த 2015ம் ஆண்டு இவர்களது காட்டில் தான் அடைமழை. இந்த இளம் நடிகர்களை கொண்டு சுமார் ரூ.400 கோடிக்கு படங்கள் தயாராகி வருகின்றன. டாப் ஹீரோக்களை விட இளம் நடிகர்களுக்கு, பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

கருத்துரையிடுக