இந்த வருசம் ஒண்ணு தான் அலியா

2015ம் ஆண்டில், அலியா பட் நடித்து ஒரே ஒரு படம் தான் வெளிவர உள்ளது என்பது அவரை மட்டுமல்லாது, அவரது ரசிகர்களுக்கு பெரும்
வருத்தத்தை அளித்துள்ளது. 2014ம் ஆண்டு, அலியா பட்டிற்கு சிறந்த ஆண்டாக இருந்தது. அறிமுகமான முதல் ஆண்டிலேயே, மூன்று மெகாஹிட் படங்களை, தனது ரசிகர்களுக்கு அலியா பட் அளித்தார். இம்தியாஜ் அலி இயக்கத்தில் ஹைவே படத்தில் அறிமுகமான அலியா பட், அதனைத் தொடர்ந்து, 2 ஸ்டேட்ஸ் மற்றும் ஹம்ப்டி சர்மா கி துல்ஹனியா என்ற 2 வெற்றிப்படங்களை அளித்தார். ரசிகர்களின் பேராதரவை பெற்றதோடு மட்டுமல்லாது, சமூக வலைதளங்களிலும் அந்த ஆண்டில் பரபரப்பாக பேசப்பட்டார். தற்போது உதயமாகியுள்ள 2015ம் ஆண்டில், விகாஸ் பால் இயக்கத்திலான ஷாந்தர் படம் மட்டுமே, அலியா நடிப்பில் வெளியாக உள்ளது. புதுப்படங்களில் நடிப்பது குறித்து இதுவரை அலியா எந்த தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget