குத்து பாட்டில் குஜிலியாகும் ராய் லட்சுமி

தெலுங்கில் பல படங்களில் குத்துப்பாட்டுக்கு நடனமாடியிருப்பவர் ராய் லட்சுமி. குறிப்பாக, ரவிதேஜாவுடன் பலுபு படத்துக்காக ஒரு பாடலில் அவர் ஆடிய ஆட்டம்
ஆந்திரவாலாக்களையெல்லாம் அதிர வைத்தது. அந்த அளவுக்கு பிரமாண்டமாக தொடைதட்டி ஆட்டம் போட்டிருந்தார் அவர். கூடவே குனிந்து நிமிர்நது அவர் கொடுத்த கவர்ச்சி போஸ் ஸ்ருதிஹாசனுக்கே அதிர்ச்சியாக அமைந்ததாம். மேலும், தமிழிலும், டூயட் பாடல்கள் என்றாலுமே குத்தாட்ட பாடல்களில் ஆடுவது போன்றே ஆடி வருகிறார் ராய்லட்சுமி. இந்த நிலையில், அரண்மனை படத்துக்குப்பிறகு லாரன்ஸ் நடிக்கவிருக்கும் ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா படத்தில் வித்தியாசமான கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார் அவர். இதற்கிடையே காதல் பண்டிகை என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடவிருக்கிறாராம். புதுமுக டைரக்டர் நவமணி என்பவர் இயக்கும் அந்த படத்தில் முற்றிலும் புதுமுகங்களே நடிப்பதால், ராய்லட்சுமி போன்ற ஒரு முன்னணி நடிகை குத்துப்பாட்டுக்கு நடனமாடினால் படத்துக்கு கமர்சியல் கிடைக்கும் என்பதால் அவரை மனதில் கொண்டு ஒரு பாடலை கம்போஸ் செய்திருக்கிறார்கள். கதைப்படி ஒரு திருவிழாவில்தான் அந்த பாடல் இட்ம்பெறுகிறதாம். அதனால், தான் கதாநாயகியாக நடிக்கும் படங்களில்கூட துக்கடா டிரஸ் அணிந்து ஆட்டம் போட்டிருக்கும் ராய்லட்சுமி, இந்த காதல் பண்டிகை படத்தில் டீசன்டான உடையணிந்து குத்தாட்டம் ஆடவிருக்கிறாராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget