கல்யாணமா சான்சே இல்ல நமீதா

தமிழ் சினிமாவில், தனது கவர்ச்சியாலும், மச்சான் என்ற ஒரே வார்த்தையாலும் ரசிகர்களை கொள்ளை கொண்டவர் நடிகை நமீதா.
சமீபகாலமாக அவருக்கு சரிவர படங்களின் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது தெலுங்கு உள்ளிட்ட பிறமொழிகளில் ஒன்றிரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நடிகை நமீதா விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வௌியானது. ஆனால் இதனை நமீதா முற்றிலுமாக மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, நான் கல்யாணம் பண்ணிக்கொள்வதைப் பற்றி யாருக்கும் பேட்டி அளிக்கவில்லை. தானாக பரவி வரும் செய்திகளுக்கு நான் பொறுப்பல்ல. கல்யாணம் என்ற பேச்சுக்கே எனது எண்ணத்தில் இடமில்லை. மக்கள் பணியில் என்னை இணைத்துக்கொள்ளவே எண்ணம். அதற்கான நேரத்திற்காக காத்திருக்கேன். எப்போதும் எனக்கு ஆதரவளித்து வரும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி. இனியும் அதே அன்போடு தொடர கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு நமீதா கூறியுள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget