டபுள் ஹீரோயினா சிருஷ்டி டாங்கே

''மேகா'' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சிருஷ்டி டாங்கே. முதல்படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து
ஜி.வி.பிரகாஷ் உடன், ''டார்லிங்'', சித்தார்த் உடன், ''எனக்குள் ஒருவன்'' போன்ற படங்களில் நடித்தார். இவர் நடித்துள்ள, ''எனக்குள் ஒருவன்'' படம் மார்ச் 6ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், இவரிடத்தில் முதல் படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்துவிட்டு, அடுத்தடுத்து இரண்டு ஹீரோயின் உள்ள படங்களில் நடிக்கிறீர்களே... என்று கேட்டால், ஜி.வி.பிரகாஷூம், ஞானவேல் ராஜாவும் கேட்டு கொண்டதால் டார்லிங் படத்தில் நடித்தேன். எனக்குள் ஒருவன் படத்தின் கன்னட பதிப்பை நான் பார்த்துள்ளேன். அந்த படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்து போனது. படத்தில் எனக்கு ட்ரீம் ரோல், அதனால் இப்படத்தில் நடித்தேன்.
பொதுவாக எனக்கு ஒரு படத்தின் கதை பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன். அதில் எத்தனை ஹீரோயின் என்றெல்லாம் நான் பார்ப்பது கிடையாது. டபுள் ஹீரோயின் படங்களால், என் இமேஜ் எந்த விதத்திலும் பாதிக்காது. இப்போது நரேன் உடன் ''கத்துகுட்டி'', கல்யாண் உடன் ''வில் அம்பு'', ம.கா.பா.ஆனந்த் உடன் ஒரு படம், தெலுங்கில் இரண்டு படம் என பிஸியாக நடித்து வருகிறேன் என்கிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget