தல பிறந்தநாளில் மாஸ் ரிலீஸ்

ஒரு ஹீரோவின் பிறந்தநாளில் அவர் நடித்த படம் ரிலீஸ் ஆவது பெரிய விஷயமில்லை. ரஜினி நடித்த லிங்கா படம் அவரது பிறந்ததினமான டிசம்பர்
12 அன்று வெளியானது. புலி படத்தைக் கூட தன்னுடைய பிறந்தநாளில் வெளியிட வேண்டும் என்று விஜய் திட்டமிட்டிருக்கிறாராம். ஆனால் ஒரு ஹீரோ நடித்த படத்தை இன்னொரு ஹீரோவின் பிறந்தநாளில் ரிலீஸ் செய்வது வியப்பான விஷயம். வெங்கட் பிரபு இயக்கத்தில், சூர்யா நடித்து வரும் 'மாஸ்' படத்தை அஜித்தின் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அஜித்தை வைத்து 'மங்காத்தா' எனும் சூப்பர் ஹிட் படத்தை இயக்கினார் வெங்கட் பிரபு. அப்போது அஜித்திடம் நெருங்கிப்பழகியவர் அஜித்துக்கு ரசிகராகவே மாறினார். அந்த அபிமானம் காரணமாக தற்போது சூர்யாவை வைத்து இயக்கம் 'மாஸ்' படத்தை அஜித்தின் பிறந்த நாளான மே 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து முழுமூச்சாக வேலை செய்து வருகிறார். வெங்கட்பிரபுவின் இந்த செயல் சூர்யா ரசிகர்களை சந்தோஷப்படுத்துகிறதோ இல்லையோ... அஜித் ரசிகர்களிடையெ பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை!
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget