பர்பார்மென்ஸ்சில் பில்டப் கொடுக்கும் ஸ்ரீதிவ்யா

கோலிவுட் மார்க்கெட்டில் இருந்த அமலாபால், லட்சுமிமேனன், பிந்துமாதவி உள்ளிட்ட சில நடிகைகளின் மார்க்கெட் வீழ்ச்சி கண்டிருப்பதால், இரண்டாம்
தட்டு ஹீரோக்களின் பேவரைட் நாயகி லிஸ்டில் இப்போது ஸ்ரீதிவ்யாதான் இருந்து கொண்டிருக்கிறார். காரணம், இவருக்கு படத்துக்குப்படம் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதாக நினைக்கும் மேற்படி ஹீரோக்கள், அவர் தங்கள் படத்தில் நடித்தால் படத்தின் வெற்றிக்கு பலமாக இருப்பார் என்று நம்புகிறார்கள். அதனால், காஜல் அகர்வால், நயன்தாரா, தமன்னா என்று நடிக்க ஆசைப்பட்டு அது நடக்காது என்று நினைக்கும் நடிகர்கள் அனைவருமே இப்போது ஸ்ரீதிவ்யாவின் ரசிகர்களாகி விட்டனர். அதனால் அவர் நடித்து வெளியாகும் படங்களையும் பார்த்து விட்டு அவரது நடிப்பை பக்கம் பக்கமாக விமர்சித்து அவரது பர்பார்மென்ஸ் குறித்து செம பில்டப் கொடுக்கிறார்களாம்.

ஆனால், ஸ்ரீதிவ்யாவோ, இப்படியே போனால் நாம் அடுத்தகட்டத்துக்கு எப்போது செல்வது என்று தனது முன்னேற்றம் பற்றி யோசிக்கத்தொடங்கியிருக்கிறார். அதனால், இதுவரை மேற்படி ஹீரோக்களின் புகழ்மழையில் நனைந்து கிடந்தவர், இப்போது அதற்கு செவிசாய்க்காமல், தன்னை கண்டுகொள்ளாமல் இருக்கும் சில மேல்தட்டு ஹீரோக்களின் கவனத்தை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதன்காரணமாக, இதுவரை கமிட்டான படங்கள்போக, இனிமேல் தான் நடிக்கப்போகும் படங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்று மார்க்கெட் இல்லாத ஹீரோக்களுக்கு டிமிக்கி கொடுக்கத் தொடங்கியிருக்கிறார் ஸ்ரீதிவ்யா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget