கோலிவுட்டை மிரட்ட வரும் ஐஸ்கிரீம் நடிகை

தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்தவர் தேஜஸ்வி. ராம்கோபால்வர்மா இயக்கிய ஐஸ்கிரீம் படத்தில் இவர் நடித்த அரை நிர்வாண காட்சிகள் அவரை
உச்சத்துக்கு கொண்டு சென்றது. அதனால் தற்போதும் தெலுங்கில் கைநிறைய படங்கள் வைத்திருக்கிறார் அவர். இந்தநிலையில், தமிழிலும் நடிக்க சரியான நேரம் பார்த்துக்கொண்டிருந்த அவர், தற்போது ரவிச்சந்திரன் இயக்கியுள்ள நட்பதிகாரம் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். ஆனால், தெலுங்கு படங்களை மாதிரி இல்லாமல் டீசன்டான வேடத்தில் நடித்துள்ளார். அதேசமயம் பாடல் காட்சிகளில் தனது அதிரடி கிளாமரை வெளிப்படுத்தியிருக்கிறாராம். மேலும், இந்த படம் தனக்கு தமிழில் நல்லதொரு தொடக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கும் தேஜஸ்வி, நட்பதிகாரம் படத்துக்காக தன்னை அழைத்து வந்த நபர்களை வைத்து, மேலும் சில கமர்சியல் டைரக்டர்களுடன் மீட்டிங் போட்டு வருகிறார். அதோடு, எனக்கு எந்த கண்டிசனும் கிடையாது. கதை என்ன கேட்கிறதோ அதன்படி நடிக்க தயாராக இருக்கிறேன். குறிப்பாக, ஐஸ்க்ரீம் படத்தில் நடித்தது போன்று கதைப்படி அரை நிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றாலும் நான் ஓகே. எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்றும் கூறியுள்ளாராம். அதனால், நட்பதிகாரம் வந்தால் தேஜஸ்விக்கு கோலிவுட்டில் இன்னும் பல படங்கள் புக்காகும் அறிகுறிகள் தெரிகிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget