இமேஜ் பார்க்காத ஹீரோயினி

அட்டகத்தி படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், அதற்கடுத்து ரம்மி படத்தில் கூட மேல கூட வச்சு என்ற பாடலில்
விஜயசேதுபதியுடன் இணைந்து நடித்து பேசப்படும் நடிகையானார். அந்த படத்தில் குறைவான காட்சிகளிலேயே நடித்த அவரை வெட்கப்படும் காட்சிகளில் நடிக்க வைக்க ரொம்பவே சிரமப்பட்டார்களாம். அப்படி நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு காக்கா முட்டை படத்தில் சேரியில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்று அடுத்த வாய்ப்பு கதவை தட்டியபோது கடும் அதிர்ச்சியடைந்து விட்டாராம். கூடவே ஏற்கனவே கருப்பாக இருக்கும் அவரை இன்னும் கருப்பாக்கி, உடல் எடையை அதிகப்படுத்தி நடிக்க வைத்தார்களாம்.

அதனால் அந்த படம் வெளியே வந்து தனது ஹீரோயினி இமேஜை பாழ்பண்ணி விடுமோ என்று உள்ளூர அச்சத்தில் இருந்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், இப்போது அப்படம் தேசிய விருது படமாகி விட்டதால் சந்தோசத்தில் மிதந்து வருகிறார். அதோடு, இந்த படத்தில் குழந்தைக்கு அம்மாவாக 35 வயது பெண்மணியின் வேடம் என்பதால் எனக்கு முதலில் பயம் இருந்தது. ஆனால் இப்போது தேசிய விருது பெற்ற ஒரு படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்திருப்பதால் அதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என்று கூறி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், இனிமேல் வித்தியாசமான கேரக்டர்கள் கிடைத்தால் இமேஜ் பார்க்காமல் நடிக்க தயாராக இருப்பதாக கூறுகிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget