தடைகளை தகர்த்தெறிந்து என் வார்த்தை கொம்பன் படத்துக்குத்தான் பொருத்தமாக இருக்கும். புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் எதிர்ப்பு
காரணமாக கொம்பன் படத்துக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. கடைசியில் நீதி வென்றது. கொம்பன் தியேட்டருக்கு வந்தது. கொம்பன் உடன் வெளியான நண்பேன்டா மற்றும் சகாப்தம் படங்கள் திரையரங்குகளில் தாக்குப்பிடிக்கவில்லை.
கார்த்தியின் 'கொம்பனு'க்கு பட்டிதொட்டியெங்கும் கிடைத்த வரவேற்பு காரணமாக கூடுதல் தியேட்டர்களில் வெற்றி ஓட்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக சமீபத்தில் வெளியான படங்களில் பி மற்றும் சி சென்டர்களில் அதிக அளவு ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்திருப்பது 'கொம்பன்' படத்திற்குதான் என்கிறார்கள் தியேட்டர் அதிபர்கள். கொம்பன் படம் வெளியாகி தற்போது 10 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 30 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக தயாரிப்பு தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.
'சிறுத்தை'க்குப் பிறகு கார்த்தி நடிப்பில் வெளிவந்துள்ள படங்களில் மெட்ராஸ் படத்தின் வசூல் சாதனை படைத்தது. தற்போது மெட்ராஸ் படத்தைவிட 'கொம்பன்' படம் அதிக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறதாம். 10 நாட்களாகியும் தியேட்டர்களில் இன்னும் கூட்டம் குறையாததால் கொம்பன் படம் வசூலில் மேலும் சாதனைகள் படைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

கருத்துரையிடுக