லெட்சுமி விலாஸ் வங்கியில் வேலை வாய்ப்பு

இந்தியாவிலுள்ள தனியார் துறை சார்ந்த ஷெட்யூல்டு வங்கிகளுள் முக்கியமான வங்கியாகிய லெட்சுமி விலாஸ் வங்கி 1926ல் நிறுவப்பட்டது.
1958ல் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று அது முதல் ஷெட்யூல்டு கமர்ஷியல் வங்கி என்ற அந்தஸ்தைப் பெற்றது.

கரூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் எல்.வி.பி.,க்கு இந்தியா முழுமையும் கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் காலியாக உள்ள இள நிலை அதிகாரிகள் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: எல்.வி.பி.,யின் ஜூனியர் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.03.2015 அடிப்படையில் 20 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். இத்துடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனும் கூடுதலாகத் தேவைப்படும்.

தேர்ச்சி முறை: ஆன்-லைன் முறையிலான எழுத்துத் தேர்வு இதன் பின்னர் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். இத்தேர்வை தமிழ் நாட்டில் சென்னை, கோவை, சேலம், மதுரை, கரூர் ஆகிய மையங்கள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மையங்கள் ஏதாவது ஒன்றில் எதிர்கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ஆன்-லைன் முறையில் ரூ.600/-ஐ இந்த பதவிக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: லெட்சுமி விலாஸ் வங்கியின் மேற்கண்ட ஜூனியர் ஆபிசர் பதவிக்கான விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களை அறிய கட்டாயம் இணையதளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 25.04.2015

இணையதள முகவரி: https://www.lvbank.com/UserFiles/File/JO_Revt.pdf
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget