ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் பணி வாய்ப்பு

ஆயில் அண்டு நேச்சுரல் காஸ் லிமிடெட் நிறுவனம் நமது நாட்டின் பெருமைக்குரிய இயற்கை எரிசக்தித் துறை சார்ந்த பொதுத்துறை
நிறுவனமாகும். இந்த நிறுவனம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தித் துறையில் சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. சர்வதேச எரிசக்தி சார்ந்த பிளாட்ஸ் 2009 அறிக்கையின்படி இது 23 ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் அசிஸ் டென்ட் டெக்னீசியன் எலக்ட்ரிகலில் 3ம், மெக்கானிகலில் 6ம், புரொடக்சனில் 17ம், கிரேடு 3 - வேதியியலில் 10ம், எலக்ட்ரானிக்சில் 12ம், பாய்லரில் 13ம் காலியாக உள்ளன. அசிஸ்டென்ட் ரிக்மேன் - டிரில்லிங் பிரிவில் 31ம், - அசிஸ்டெண்ட் கிரேடு 3 - மெட்டீரியல்ஸ் மேனேஜ்மெண்ட்ல் 1ம், டிரான்ஸ்போர்ட்டில் 2ம், செக்யூரிடி சூப்பர்வைசரில் 2ம், அஸிஸ்டென்ட் டெக்னீசியன் இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 16ம் காலியாக உள்ளன.
ஜூனியர் அசிஸ்டென்ட் டெக்னீசியன் சார்ந்த பாய்லரில் 1ம், புரொடக்சனில் 1ம், எலக்ட்ரிகலில் 2ம் காலியாக உள்ளன. இவை தவிர ஜூனியர் அசிஸ்டென்ட் பிரிவைச் சார்ந்த இங்கிலீஷ் ஸ்டெனோவில் 4ம், மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்டில் 8ம், அக்கவுன்ட்சில் 1ம், பெர்சானல் அட்மினிஸ்ட்ரேஷனில் 1ம் நிரப்பப்பட உள்ளன.

வயது: 25.04.2015 அடிப்படையில் டெக்னிகல் பதவிகளுக்கு குறைந்த பட்சம் 18 வயது நிரம்பியிருப்பதும், அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டிருப்பதும் தேவைப்படும். ஓ.பி.சி., மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு அதிகபட்ச வயதில் சலுகைகள் உள்ளது. ஹெவி எக்விப்மென்ட் ஆபரேட்டர் பதவிகளுக்கு உச்சபட்ச வயது 35ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து பெறவும்.

கல்வித் தகுதி: டெக்னிகல் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் துறைக்கு ஏற்றபடி மூன்று வருட டிப்ளமோ படிப்பை குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது தேவைப்படும். இதர பதவிகளுக்கு சிறப்புப் படிப்புத் தகுதி தேவை. முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து பெறவும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு அடிப்படையில் இந்த காலியிடங்கள் நிரப்பப்படும். மும்பை, அவுரங்காபாத், நாசிக், நாக்பூர் ஆகிய ஏதாவது ஒரு மையத்தில் இத்தேர்வை எதிர்கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 25.04.2015

இணையதள முகவரி: http://eapplynew.com/ongcmumbai2015/Pages/index.aspx
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget