குத்து டான்ஸ் நடிகையான நந்திதா

விஜய் நடிக்கும் புலி படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில்
விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகாவும், ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்கள். புலி படத்தில் இரண்டு கதாநாயகிகள் மட்டுமே என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டநிலையில், இப்போது இன்னொரு நடிகையும் புலி படத்தில் இணைந்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல... அட்டகத்தி நந்திதா தான். புலி படத்தில் என்ன கேரக்டர் என்று கேட்டால் அது பற்றி வாய் திறக்க மறுக்கிறார் நந்திதா. முக்கியமான கேரக்டர் என்று சொல்லித்தான் அவரை புக் பண்ணி இருக்கின்றனர். ஆனால் என்ன கேரக்டர் என் விவரம் நந்திதாவுக்கு சொல்லப்படவில்லை என்று தகவல் அடிபடுகிறது. புலி படத்தில் விஜய் காம்பினேஷனில் நந்திதா நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு விரைவில் துவங்குமாம்.

சென்னை, கேரளா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஆந்திராவிலுள்ள தலக்கோணம் பகுதியில் புலி டீம் தற்போது முகாமிட்டிருக்கிறது. அதன் அருகில்தான் அண்மையில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. புலி படத்தில் நந்திதா நடிக்கும் வேடம் பற்றி இரண்டுவிதமாக தகவல்கள் உலவுகின்றன. ஒன்று.. ஒரேயொரு பாடல் காட்சியில் குத்து டான்ஸ் ஆடுகிறார் என்பது. மற்றொரு தகவல்... விஜய்யின் தங்கை வேடத்தில் நடிக்கிறார் என்பது. எது உண்மை என்று விரைவில் தெரிய வரும்..
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget