தென்னிந்திய திரை உலகில் வளர்ந்து வரும் நடிகையான நித்யா மேனனின் நடிப்பில் ஒரே நேரத்தில் வெளிவந்த ஒ காதல் கண்மணி, காஞ்சனா 2 ஆகிய
படங்கள் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி நடை போட்டு வருகின்றன. அந்த வகையில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள ஓகே கண்மணி படம் இளைஞர்களால் கொண்டாடப்பட்டலும், திருமணத்திற்கு முன்னர் சேர்ந்து வாழும் கதை களத்தில் படம் நகர்வதால் சில எதிர்ப்புகளையும் இப்படம் சந்தித்து வருகின்றது.
இந்நிலையில் படத்தின் நாயகி நித்யா மேனன் இது குறித்து கூறுகையில், திருமணத்திற்கு முன்னர் சேர்ந்து வாழ்வது என்பது அவ்வாறு வாழும் தம்பதியர் சம்மந்தப்பட்ட தனிப்பட்ட விஷயம் அதில் யாரும் கேள்வி கேட்க முடியாது என்று தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வரவேற்பைப் பெற்றுள்ள ஓகே கண்மணி படத்தில் நடிகை நித்யா மேனன் நாயகன் துல்கர் சல்மானுடன் முத்தக் காட்சியிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக