லத்திகா படத்திற்கு பிறகு சில மேடைகளில் பேசும்போது எனக்கு போட்டியே ரஜினி சார்தான் என்று சொடக் போட்டு வந்தவர் பவர்ஸ்டார். அவர் காமெடியன் என்பதால் அவரது பேச்சைக் கேட்ட
அனைவரும் அதையும் காமெடியாகவே எடுத்துக்கொண்டனர். இந்த நிலையில், கிடா பூசாரி மகுடி என்ற படத்தில் ஜானி படத்தில் ரஜினி நடித்தது போன்று சலூன் கடை நடத்துபவராக அவரது கெட்டப்பிலேயே நடித்திருந்தார் பவர்ஸ்டார்.
அதையடுத்து இப்போது அட்ரா மச்சான் விசிலு என்ற படத்தில் சூப்பர் ஸ்டார் என்றொரு நடிகர் வேடத்திலேயே நடித்துள்ளார் பவர். அவரது ரசிகர் மன்ற தலைவராகத்தான் மிர்ச்சி சிவா நடித்திருக்கிறார். அந்த வகையில், பல காட்சிகளில் ரஜினி பாணியில் சில சின்னச்சின்ன ஸ்டைல் செய்து நடித் துள்ள பவர்ஸ்டார், ரஜினியை நிறைய மிமிக்ரி செய்திருக்கிறாராம். அவரது ஓப்பனிங், பில்டப் காட்சிகள் போன்றே பவர் ஸ்டாருக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம். அந்த வகையில், அவர் செய்துள்ள காமெடி கலாட்டா ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்கிறார்கள்.
இந்த நிலையில், வாங்க வாங்க என்றொரு படத்தில் சினிமா தயாரிப்பாளராகவே நடித்துள்ளார் பவர்ஸ்டார். இதே படத்தில் அப்புக்குட்டி இயக்குனர் வேடத்தில் நடித்துள்ளார். சினிமாவுக்குள் சினிமா எடுக்கும் கதாபாத்திரங்களில் அவர்கள் அடித்துள்ள லூட்டி செம காமெடியாக படமாக்கப்பட்டிருக்கிறதாம்.

கருத்துரையிடுக