2016ல் அஜித் படம் வருமா

அஜித் அடுத்து நடிக்க உள்ள புதிய படத்தை சிவா இயக்கப் போவதாகவும், அதற்கு அனிருத் இசையமைக்கப் போவதாகவும் கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளிவந்து
கொண்டிருக்கின்றன. ஆனால், இதுவரை அந்தப் படம் பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே சமயம் அறிவிப்பு எதுவும் இல்லாமலே படப்பிடிப்பு ஆரம்பமானதாகவும் தகவலும் வரவில்லை.
அஜித் நடித்து 2015ல் வெளிவந்த 'வேதாளம்' திரைப்படம் மாபெரும் வசூல் படமாக அமைந்தது. அந்தப் படத்தின் வெற்றியை அடுத்து விரைவில் அஜித் புதிய படத்தில் நடிக்க ஆரம்பித்து விடுவார், உடனுக்குடன் புதிய படம் வரும் என்று எதிர்பார்த்த அஜித் ரசிகர்களின் ஆசை இந்த ஆண்டில் நிராசையாகப் போய்விடும் என்றே தெரிகிறது.

ஜுலை மாதம் அஜித் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகலாம் என்றும் செய்திகள் வெளியாகின. அப்படியே ஆரம்பமானாலும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து, இறுதிக் கட்டப் பணிகள் நடக்க வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள். எவ்வளவு வேகமாக நடத்தினலும் கூட 2017ம் ஆண்டு பொங்கலுக்கு வேண்டுமானால் அந்தப் படம் வெளிவரலாம் என்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு அஜித் காலில் ஆபரேஷன் நடந்த காரணத்தால்தான் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போனது என அஜித் வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள். ஆனால், 'வேதாளம்' படத்தை விட இன்னும் பெரிய வெற்றியைக் கொடுக்கும் முனைப்பில் அஜித் இருக்கிறார் என்றும், அதற்கேற்ற கதை இன்னும் முழுமையாக அமையவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2016ம் ஆண்டைப் பொறுத்தவரையில் அஜித் ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றமான ஆண்டாகவே அமைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget