ஷாம்லியை ஹீரோயினி ஆக்கும் ஷாலினி

தமிழ் சினிமாவில், ஷாலினி அஜீத் அவரது தங்கையான ஷாம்லி ஆகிய இருவருமே குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்ற பின்னர் கதாநாயகி ஆனவர்கள். அந்த வகையில், விஜய்,
அஜீத், பிரசாந்த் பல முன்னணி நடிகர் களுடன் நடித்து வேகமாக வளர்ந்து கொண்டிருந்த நேரம் அமர்க்களம் படத்தில் நடித்தபோது அஜீத்துடன் காதல்வயப்பட்ட ஷாலினி, அதன்பிறகு நடிப்பதை நிறுத்திக்கொண்டு அவரை திருமணம் செய்து கொண்டு முழுநேர இல்லத்தரசியாகி விட்டார். திருமணத்தற்கு பிறகும் சில நடிகைகள் நடிப்பதை போல்கூட பின்னர் அவர் நடிக்க வரவில்லை.

ஆனால், தனது தங்கை ஷாம்லியை பெரிய நடிகையாக்கிப்பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஷாலினி. அதனால் அஜீத்திற்காக கதை கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்த அவர், தற்போது தனது தங்கைக்காகவும் தீவிரமாக கதை கேட்கிறார். தற்போது விக்ரம் பிரபுவுடன் வீரசிவாஜி படத்தில் நடித்துள்ள ஷாம்லி, அதற்கு முன்பு தனுஷின் கொடி படத்திலும் கமிட்டாகியிருந்தார். ஆனால் அந்த படத்தில் திரிஷா முக்கிய நாயகியாக நடித்ததால் சிறிய ரோலில் நடித்து இமேஜை கெடுத்துக்கொள்ள வேண்டாமென்று அந்த படத்தில் ஷாம்லி யை நடிக்க வைக்க மறுத்தார் ஷாலினி.

இந்த நிலையில், தற்போது வீரசிவாஜி ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருப்பதால், அடுத்தடுத்து தங்கை ஷாம்லிக்காக டைரக்டர்களிடம் கதை கேட்டு வரும் ஷாம்லி, சிங்கிள் ஹீரோயினி கதைகளுக்கு முதலிடம் கொடுப்பதோடு, காதல், செண்டிமென்ட், காமெடி கலந்த கலவையான கதாநாயகி வேடங்களில் ஷாம்லியை நடிக்க வைக்க விரும்புவதாகவும் டைரக்டர்களிடம் கூறி வருகிறார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget