ஹரி இயக்கிய சேவல் படத்தில் பரத்துக்கு ஜோடியாக அறிமுகமான பூனம் பாஜ்வா, அதன்பிறகு கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு, துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில்
கதாநாயகியாக தொடர்ந்தார். ஆனால் ஸ்ரீகாந்துடன் நடித்த எதிரி எண்-3 படம் கிடப்பில் போடப்பட்டதை அடுத்து பூனம்பாஜ்வாவுக்கு கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் சில ஆண்டு இடைவெளிக்குப்பிறகு ஜெயம்ரவி நடித்த ரோமியோ ஜூலியட் படத்தில் ஒரு கவர்ச்சிகரமான ரோலில் நடித்தார். அதேபோல் சுந்தர்.சியின் அரண்மனை-2விலும் கவர்ச்சி ரோலை தொடர்ந்த அவர், தற்போது அதே சுந்தர்.சி நடித்துள்ள முத்தின கத்திரிக்காய் படத்திலும் கவர்ச்சிகரமான வேடத்தில்தான் நடித்துள்ளார்.
மலையாளத்தில் வெளியான வெள்ளிமூங்கா படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் கதாநாயகி வேடம்தான் என்றாலும், கவர்ச்சி நடிகைகள் போன்று கிளுகிளுப் பான ரோலில் நடித்திருக்கிறாராம் பூனம்பாஜ்வா. அதேசமயம், இந்த படத்தின் டைட்டீலின் பொருள் தெரியாமல் இருந்த பூனம்பாஜ்வா அப்படத்தில் நடித்து வந்தபோது யூனிட் நபர்களிடம் கேட்டாராம். அப்போதுதான் தன்னை முத்தின கத்திரிக்காயாக காட்டுகிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. அதையடுத்து, ரொம்பவே பீல் பண்ணிய பூனம் பாஜ்வா, 32 வயதை தாண்டிய நடிகைகள்கூட இளமையான வேடங்களில் நடித்து வரும்போது 27 வயதான நான் முத்தின வேடங்களில் நடித்து எனது இமேஜை கெடுத்துக்கொள்கிறேனே என்று பீல் பண்ணினாராம் பூனம்.

கருத்துரையிடுக